Sunday, June 27, 2010
(16) அனைத்திலும் சிறந்தவை!
1.அனைத்திலும் விட உள்ளத்திற்கு சாந்தி அளிப்பது இறைதியானத்தில் ஈடுபட்டுஇருப்பது.
2.அனைத்திலும் விட நிறைய அன்புக்குறியவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
3.அனைத்திலும் நல்ல உபதேசி மனசாட்சி.
4.அனைத்திலும் விட அருமருந்து நன்நம்பிக்கை
5.அனைத்திலும் விட கஷ்ட்டமானது கடன்.
6.அனைத்திலும் விட நற்பாக்கியம் நல்குவது ஆனந்தமும் ஆரோக்கியமும்.
7.அனைத்திலும் விட மிக நல்லது உள்ளதைக்கொண்டு திருப்திபடல்.
8.அனைவரிலும் பெரும் வீரர் கோபத்தை அடக்குபவர்.
9.அனைத்திலும் விட அழியாபெருஞ்செல்வம் கல்வி.
10.அனைத்திலும் அங்கீகரிக்கக்கூடாதது கோபம்.
11.அனைவரிலும் மோசக்காரன் நயவஞ்சகன்.
12.அனைத்திலும் விட அதி சக்தி வாய்ந்தது இன்சொல்
13.அனைவரிலும் அற்பமானவன் நன்றி மறப்பவன்.
14.அனைத்திலும் விட நல்ல பெயர் எடுப்பது கொடை.
15.அனைவரிலும் மடமையானவன் பிறருக்கு உபத்திரவன் கொடுப்பவன்.
16அனைவரிலும் கெட்டவன் புறம் பேசுபவன்.
17.அனைத்து புறம் பேசுபவர்களிலும் கெட்டவன் குழப்பம் விளைவிப்பவன்.
18.அனைவரிலும் பெரும் விரோதி பாசாங்கு செய்பவன்.
19.அனைவரிலும் மகாபாவி குர் ஆனையும்,ஹதீஸையும் மறுப்பவன்.
20.அனைத்திலும் விட மன்னிக்கமுடியாத குற்றம் இறைவனுக்கு இணை வைத்தல்.
நபிமொழி
Labels:
அறிந்து கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ப்ளாக்கில் ரொம்ப அருமையான இடுகை போட்டு அசத்தலாக கொண்டு போறீங்க தோழி.
யோசிக்க வேண்டிய வரிகள்..
தோழி ஆசியா,நன்றி.
தம்பி ஜெய்லானி,செயல் படுத்தவும் வேண்டிய வரிகள்.நன்றி
//தம்பி ஜெய்லானி,செயல் படுத்தவும் வேண்டிய வரிகள்.நன்றி//
முதல்ல மூளையில ஏறனுமில்ல அதனால அப்படி எழுதினேன். மூளையில் பதிந்தால் தானகவே செயல் வடிவம் வந்துவிடும் . நன்றி.
// ஜெய்லானி said...
//முதல்ல மூளையில ஏறனுமில்ல அதனால அப்படி எழுதினேன். மூளையில் பதிந்தால் தானகவே செயல் வடிவம் வந்துவிடும் . நன்றி. //
ஜெய்லானி நமக்கு இருக்கிறதைப் பற்றி தான் பேசணும். இல்லாததைப் பற்றி பேசி வன்முறையில் ஈடுபடக்கூடாது ஆமா சொல்லிட்டேன். க்கி க்கி
Post a Comment