Wednesday, June 30, 2010

(20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.

இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.

மூஸா நபி (அலை)அவர்களிடம் இறைவன் "ஓ மூஸாவே!நீர் எனக்காக என்னென்ன நற்கிரியைகள் செய்தீர்கள்?" என வினவினான்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள் "இறைவா!நான் உனக்காகவே நோன்பு நோற்றேன்.தொழுதேன்.திக்று செய்தேன்.தஸ்பீஹ் செய்கிறேன்.நீ எனக்களித்த கடமைகளை நிறைவேற்றினேன்"என்றார்கள்.

அதற்கு இறைவன்"ஓ..மூஸாவே...ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை விரைவில் கடந்து செல்வதற்காக தொழுதீர்.நரகைவிட்டு உம்மை பாதுகாத்துக்கொள்ள நோன்பு நோற்றீர்.உமக்கு சொர்க்கத்தில் பதவி உயர்த்தப்படுவதற்காக தஸ்பீஹ் செய்தீர். உமக்கிடப்பட்ட கடமைகள் நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக இவை அனைத்தையும் செய்தீர்.இவை யாவும் உமக்காக செய்து வந்த கடமைகள்.எனினும் எனக்காக ஏதேனும் நற்கரியைகள்செய்தீரா?" என்று கேட்டான்.

அப்படிப்பட்ட இறைவனுக்கு ஆற்ற வேண்டிய நற்கிரியைகள் எதுவென மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ் இடத்தில் கேட்டபொழுது இறைவன் ஆறு கடமைகளை இயம்பினான்.

1.ஓ..மூஸாவே!பசித்தோருக்கு உணவளித்து பசியை ஆற்றுவீராக!

2.ஓ..மூஸாவே!தாகித்தோருக்கு நீரளித்து தாகத்தை நீக்குவீராக!

3.ஓ..மூஸாவே!உமது ஒவ்வொருபேச்சையும்,செயலையும் முகஸ்துதியைவிட்டும் பாதுகாத்துக்கொள்வீராக!

4..ஓ..மூஸாவே! அபயம் தேடுவோருக்கு அபயம் அளிப்பீராக!

5..ஓ..மூஸாவே!அநீதத்துகுள்ளானவர்களுக்கு ஆதரவு அளிப்பீர்களாக!

6..ஓ..மூஸாவே!அறிஞர்கள்(ஆலிம்)களுக்கு சங்கை செய்வீர்களாக!

இவ்வாறு இறைவன் இயம்பியதாக ரசூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

Monday, June 28, 2010

(19) நெஞ்சத்தில் மரித்துவிட்ட பத்துவித செயல்கள்:





ஹஜ்ரத் இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்)அவர்களிடம் ஒரு குழுவினர் வந்து

"பெரியார் அவர்களே!அல்லாஹ் எல்லாவிஷயத்திற்கும் என்னிடமே பிரார்த்தனை செய்யுங்கள்.நான் நிறைவேற்றுவேன் என்று திரு குர் ஆனில் கூறி இருக்கின்றான்.அதற்கேற்ப நாங்கள் எமது கஷ்டங்களைப்போக்க மன்னிப்புக்கோரி காலையிலும்,மாலையிலும்,இரவினிலும் இறைவனிடன் துஆ கேட்ட வண்ணம் இருக்கின்றோம்.ஆனால் ஹக்கன் எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம்?"என்று கேட்டனர்.

அதற்கு அத்ஹம் அவர்கள் "உங்கள் கல்பில்(நெஞ்சங்களில்)இருக்கும் ஈமான்(நன்நம்பிகை)பத்து வித காரணக்களால் மரித்துப்போய் விட்டது.உங்களது ஈமான் ஒளி மங்கி இருள் அடைந்து போய் விட்டது.அத்தகைய இருள் நெஞ்சத்தின் பிரார்த்தனைகள் இறைவன் சமூகம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை"என பதில் அளித்தார்கள்.

கல்பில் மரித்துப்போன அந்த பத்துவித காரியங்கள்:

1.இறைவன் ஒருவன் தான் என்று நன் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.ஆனால் இறைவனின் ஆணைகளை நிறைவேற்ற மறந்து விடுகின்றீர்கள்.

2.அல்லாஹ்வின் அருளைப்பெற அல் குர் ஆனை தினமும் ஓதி வருகின்றீர்கள்.ஆனால் அதில் உள்ள போதனைப்படி நடக்காமல் இருக்கின்றீர்கள்.

3.ஷைத்தான் (இப்லீஸ்)உங்கள் பகைவன் என்கின்றீர்கள்.ஆனால் அவனை பின் பற்றி நடந்து விடுகின்றீர்கள்.

4.நபிகள் (ஸல்) அவர்களை ஆழமாக நேசிப்பதாக வாதிக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொன்ன நல்வழியை செயல் படுத்த மறுக்கின்றீர்கள்.

5.சொர்க்கத்தை அடைய ஆசிக்கின்றீர்கள்.ஆனால் அதனை அடைவதற்கு செய்ய வேண்டிய நற்கிரியைகளை செய்ய மறுக்கின்றீர்கள்.

6.நரகத்திற்கு அஞ்சுவதாக பகருகின்றீர்கள்.ஆனால் பாவச்செயல்கள் செய்வதை விட்டும் விலகாமல் இருக்கின்றீர்கள்.

7.பிறரின் குற்றங்களைத்தேடித்திரிகின்றீர்கள்.ஆனால் உங்களிடையே பின்னிக்கிடக்கும் குற்றங்களை சிந்தித்து உணரத்தவறிவிட்டீர்கள்.

8.மரணத்தை நம்புகின்றீர்கள்.ஆனால் அதற்கு முன் நற்செயல்களை செயல்கள் புரியத்தயங்குகின்றீர்கள்.

9.அல்லாஹ்வினால் அளிக்கப்படும் ஆகாரங்களை உண்கின்றீர்கள்.ஆனால் அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த தவறி விடுகின்றீர்கள்.

10.மரணம் அடைந்தவர்களை நல் அடக்கம்செய்கின்றீர்கள்.ஆனால் நீங்களும் இதுபோல் அடக்கப்படுவோம் என்ற பய உணர்வு கொள்ளத்தவறிவிட்டீர்கள்.

இவ்வாறு இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்)அவர்கள் மறு மொழி பகர்ந்தார்கள்.இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஹக்கனையும்,அவனது ரசூலையும் ஈமான் கொண்டிருந்தால் மட்டும் போதாது.அவர்களின் போதனைப்படி நடக்கவேண்டும்.அப்பொழுதுதான் இறைவனின் அருளும் அன்பும் நமக்கு கிட்டும்.நம் நியாயமான பிராத்தனைகளுக்கு இறைவன் செவிசாய்ப்பான்.நாம் கேட்கும் துஆக்களை இறைவன் அங்கீகரிப்பான்.துஆவிலும்,அல்லாஹ்வின் பால் உள்ள அச்சத்திலும், வணக்கத்திலும்,ஏனைய நற்கிரியைகளிலும் ஓர்மை அவசியம் என்பதினை நாம் மறக்கக்கூடாது.

படித்ததில் பதிந்தவை

(18) பத்து வித குணங்கள்.

பத்துவிதமான மக்களிடம் பத்துவித குணங்களிருப்பதை இறைவன் வெறுக்கின்றான்:


1.செல்வர்களிடத்தில் - கஞ்சத்தனம்.

2.வலியோர்களிடத்தில் - பெருமைத்தனம்

3.அறிஞர்களிடத்தில் - பேராசை.

4.பெண்களிடத்தில் - நாணமின்மை.


5.முதியோர்களிடத்தில் - உலகப்பற்று

6.இளைஞர்களிடத்தில் - சோம்பல்


7.ஆட்சியாளர்களிடத்தில் - அநீதி


8.போர்வீரர்களிடத்தில் - கோழைத்தனம்.


9.துறவிகளிடத்தில் - தற்பெருமை

10.வணக்கஸ்தலங்களில் - புகழாசை.

(17) அறிந்து கொள்ளுங்கள்

அறிந்து கொள்ளுங்கள்.

உலகில் இமைக்கும் நேரம் கூட அல்லாஹ்விற்கு மாறு செய்யாதவர்கள்.

1.அலி இப்னு அபிதாலிப்

2.ஸூரா யாஸீனில் வரும் ஹபீப் இப்னு நஜ்ஜார்

3.மூஸா (அலை)அவர்களை இறைத்தூதர் என ஏற்று இறை நம்பிக்கை கொண்ட கிஜுபீலு எனும் தச்சர்.


மலக்குல் மவுத்:

ரஜப் மாதம் முதல் நாள் செவ்வாய்க்கிழமை அன்று இறைவனால் இஸ்ராயீல் அவர்களுக்கு "மலக்குல் மவுத்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

ஆதம் (அலை)

ஆதம் (அலை)அவர்களை உயிர்ப்பித்து முதல் மாமனிதராக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட நாள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும்.

வானவர்களுக்கு இறைவன் வழங்கிய பட்டம்:

1.ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு நபிமார்களுக்கு புனித செய்திகளை எடுத்து செல்லும் புனித தூதுவர் பட்டம்.

2.மீக்காயீல் (அலை) அவர்களுக்கு இரணத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

3.இஸ்ராஃபீல்(அலை) அவர்களுக்கு உலக முடிவு நாளில் "சூர்" ஊதும் பொறுப்பு.

4.இஸ்ராயீல்(அலை) அவர்களுக்கு நண்பர்களை நண்பர்களோடு சேர்த்து வைக்கும் பொறுப்பு.

சிறப்பு மிக்கவை:

நாட்களில் சிறப்புடையது வெள்ளிக்கிழமை.

மாதங்களில் சிறப்புடையது ரமலான் மாதம்.

மனிதர்களில் சிறப்புடைவர் ஆதம் (அலை)

நபிமார்களில் சிறப்புடையவர் ரஸூல் -( ஸல்)

வணக்கங்களில் சிறப்புடையது ஸலவாத்து.

திருக்குர் ஆனில் சிறப்புடையது சூரத்துல் கஃபு

படித்ததில் பதிந்தவை.




Sunday, June 27, 2010

(16) அனைத்திலும் சிறந்தவை!



1.அனைத்திலும் விட உள்ளத்திற்கு சாந்தி அளிப்பது இறைதியானத்தில் ஈடுபட்டுஇருப்பது.

2.அனைத்திலும் விட நிறைய அன்புக்குறியவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

3.அனைத்திலும் நல்ல உபதேசி மனசாட்சி.

4.அனைத்திலும் விட அருமருந்து நன்நம்பிக்கை

5.அனைத்திலும் விட கஷ்ட்டமானது கடன்.

6.அனைத்திலும் விட நற்பாக்கியம் நல்குவது ஆனந்தமும் ஆரோக்கியமும்.

7.அனைத்திலும் விட மிக நல்லது உள்ளதைக்கொண்டு திருப்திபடல்.

8.அனைவரிலும் பெரும் வீரர் கோபத்தை அடக்குபவர்.

9.அனைத்திலும் விட அழியாபெருஞ்செல்வம் கல்வி.

10.அனைத்திலும் அங்கீகரிக்கக்கூடாதது கோபம்.

11.அனைவரிலும் மோசக்காரன் நயவஞ்சகன்.

12.அனைத்திலும் விட அதி சக்தி வாய்ந்தது இன்சொல்

13.அனைவரிலும் அற்பமானவன் நன்றி மறப்பவன்.

14.அனைத்திலும் விட நல்ல பெயர் எடுப்பது கொடை.

15.அனைவரிலும் மடமையானவன் பிறருக்கு உபத்திரவன் கொடுப்பவன்.

16அனைவரிலும் கெட்டவன் புறம் பேசுபவன்.

17.அனைத்து புறம் பேசுபவர்களிலும் கெட்டவன் குழப்பம் விளைவிப்பவன்.

18.அனைவரிலும் பெரும் விரோதி பாசாங்கு செய்பவன்.

19.அனைவரிலும் மகாபாவி குர் ஆனையும்,ஹதீஸையும் மறுப்பவன்.

20.அனைத்திலும் விட மன்னிக்கமுடியாத குற்றம் இறைவனுக்கு இணை வைத்தல்.

நபிமொழி

(15) தர்மத்தின் சிறப்பு

அல்லாஹ் ஜல்லஸானஹுதாஆலா இப்பூமியை படைத்த பொழுது அது அசைந்து ஆடி நடுங்கியது.எனவே அதன் மீது மலைகளை நிலை நாட்டினான்.பூமியின் மீது மலைகளை உற்பத்தி செய்து அமைத்த பின்னர் பூமி நிலை பெற்றுவிட்டது.மலைகளின் உறுதியையும்,பிரமாண்டத்தையும் கண்ணுற்ற வானவர்கள கீழ்கண்டவாறு இறைவனிடம் கேட்டனர்.

வானவர்கள்: யா அல்லாஹ்!மலைகளைவிட உறுதியானவற்றை இவ்வுலகில் நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!இரும்பை படைத்துள்ளேன்.மலையையே தகர்க்கும் சக்திகொண்டது இரும்பு.


வானவர்கள்: இரும்பை விட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!நெருப்பை படைத்து இருக்கின்றேன்.ஏனெனில் அந்த இரும்பையே உருக்கும் ஆற்றல் கொண்டது நெருப்பு.


வானவர்கள்: நெருப்பைவிட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!நீரை படைத்து இருக்கின்றேன்.நீரானது நெருப்பையே அழிக்கக்கூடிய திறன் வாய்ந்தது.


வானவர்கள்: நீரை விட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!காற்றை படைத்து இருக்கின்றேன்.காற்றானது நீரையே அலைகழிக்கும் ஆற்றல் மிக்கது.


வானவர்கள்: காற்றைவிட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?

இறைவன்: ஆம்!ஆதத்தின் சந்ததிகளைப்படைத்துள்ளேன் - ஆனால் அவர்கள் இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் ஏதேனும் தர்மம் செய்யும் பொழுதுதான்.

இவ்வாறு இறைவன் கூறியதாக அண்ணல் நபி (ஸல்)அவர்கள் பகர்ந்துள்ளார்கள்.தர்மத்தின் வலிமையை பார்த்தீர்களா?சுப்ஹானல்லாஹ்!

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
ஆதாரம்: திர்மிதி

(14) இனியவை இருபது


1.ஏழைகளுக்கு பெருமை அழகில்லை

2.உலமாக்களுக்கு பேராசை அழகில்லை

3.அரசர்களுக்கு அவசரம் அழகில்லை

4.சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை

5.மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை

6.உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை

7.கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.

8.மாணவர்களுக்கு மறதி அழகில்லை.

9.மனைவிகளுக்கு மறைத்தல் அழகில்லை

10.வியாபாரிகளுக்கு எடைகுறைப்பு அழகில்லை

11.யாசகர்களுக்கு ஆணவம் அழகில்லை

12.ஆசிரியர்களுக்கு பாரபட்சம் அழகில்லை.

13.உயர் அதிகாரிகளுக்கு மெத்தனம் அழகில்லை

14.காவலாளிக்கு தூக்கம் அழகில்லை.

15.நண்பர்களுக்கு எதிர்பார்ப்பு அழகில்லை.

16.போட்டியாளருக்கு பொறுமையின்மை அழகில்லை.

17.பெரியவர்களுக்கு புலம்பல் அழகில்லை.

18.சிறியவர்களுக்கு அகம்பாவம் அழகில்லை.

19.மருத்துவர்களுக்கு மனிதநேயமின்மை அழகில்லை.

20.மனிதனுக்கு சகிப்பின்மை அழகில்லை.

Wednesday, June 23, 2010

(13) இஸ்லாம் இயம்பும் பொறுமையும் விருப்பங்களும்


பொறுமைகள் பலவிதம்.

1.வயிற்றின் ஆசையை நிறைவேற்றுவதின்மீது பொறுமை இதற்கு போதுமென்ற தன்மை என்று பொருள்.

2.வறுமை ஏற்படுவதின் மீது பொறுமை இதற்கு நற் பொறுமை எனப்பொருள்.

3.பொருள் வசதி ஏற்படுவதின் மீது பொறுமை.இதற்கு நப்ஸை கட்டுப்படுத்தல் என்று பெயர்.

4.உடல் இச்சைகளை நிறைவேற்றுவதின் மீது பொறுமை . இதற்கு பத்தினித்தனம் என்று பொருள்.

5.போர் புரிவதின் மீது பொறுமை இதற்கு வீரம் என்று பொருள்.

6.கோபம் ஏற்படுவதின் மீது பொறுமை இதற்கு சாந்தம் என்று பொருள்.

7.துன்பங்கள் ஏற்படுவதின் மீது பொறுமை இதற்கு நெஞ்சத்தின் பிரிவு என்று பொருள்.

8.இரகசியத்தை மறைப்பதின் மீது பொறுமை இதற்கு மறைத்தல் என்று பெயர்.

9.வீணான பகட்டு வாழ்க்கையின் மீது பொறுமை இதற்கு பற்றின்மை என்று பொருள்.

10.எதிர் பாராத விஷயங்கள் ஏற்படும் பொழுது வரும் பொறுமை இதற்கு மனோதிடம் என்று பொருள்.

முஃமீன்கள் விரும்பும் விருப்பங்கள்.

1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.

3.அறிய விரும்பினால் நன்மையின் நலவுகளையும்,தீமையின் விபரீதங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதை மட்டும் கொடுங்கள்.

5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

6.பேச விரும்பினால் இன்சொற்களை பேசுங்கள்.

7.அடிக்க விரும்பினால் மனோ இச்சைகளை அடித்து விரட்டுங்கள்.

8.களைய விரும்பினால் துர்பழக்கத்தை களைந்து விடுங்கள்.

9வெறுக்க விரும்பினால் ஹராம்களை வெறுத்து விடுங்கள்.

10.மறைக்க விரும்பினால் பிறர் உங்களை நம்பி கூறிய சொற்களை மறைத்து விடுங்கள்.

Sunday, June 13, 2010

(12) ஸல் - ரலி - ரஹ் - அலை


ஸல் - ரலி - ரஹ் - அலை

ஸல் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
நாயகத்தின் திரு நாமத்திற்குப்பின்னால் புகழப்படுபவை.
பொருள்:நாயகம் அவர்கள் மீது அல்லாஹ் ஸலாவத்து சொல்வானாக!

ரலி - ரலியல்லாஹு அன்ஹு.
ஸஹாபாக்களின் பெயருக்குப்பின்னால் கூறப்படவேண்டும்.
பொருள்:அல்லாஹ் அவர்களிப்பொருந்திக்கொண்டான்.
ஒரு பெண் சஹாபி பெயருக்குப்பின் ரலியல்லாஹு அன்ஹா என்று கூறவேண்டும்
இரு ஆண்,பெண் ஸஹா(பி)பா பெயருக்குப்பின்னால் ரலியல்லாஹு அன்ஹுமா என்று கூறவேண்டும்.
இரண்டு ஸஹாபாக்கள் பெயருக்கு பின் ரலியல்லாஹு அன்ஹுன் என்று கூற வேண்டும்.
இரண்டுக்கும் அதிகமான பெண் சஹாபியாக்கள் பெயருக்குப்பின் ரலியல்லாஹு அன்ஹுன்ன என்று கூற வேண்டும்.

ரஹ் - ரஹ்மத்துல்லாஹி அலைஹி
இமாம்கள்,வலிமார்கள்,தாபியீன்கள்,அல்லாஹ்வின் நல்லடியார்கள்,பெயருக்குப்பின் கூறப்படுபவை.
மேற்கண்டவர்களின் பெண்களின் பெயருக்குப்பின் ரஹ்மத்துல்லாஹி அலைஹா என்று கூற வேண்டும்.
மேற்கண்டவர்களின் இரண்டு ஆண்,பெண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹிமா என்று கூற வேண்டும்.
இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹிம்
இரண்டுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹின்ன
இவ் உலகத்தை விட்டு மறைந்த இக்கால மார்க்க பெரியார்களை (ரஹ்) என்று கூறலாம்.

அலைஹி - அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
நபியின் பெயருக்குபின் கூறப்படவேண்டும்.
பொருள்:அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக
இரண்டு நபிமார்கள் பெயருக்குப்பின் அலைஹி மஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறவேண்டும்.
இரண்டு நபி மார்களுக்கும் அதிகமானோர் பெயர்களுக்குப்பின் அலைஹி முஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூற வேண்டும்.
ஆதாரம்:பிக்ஹின்

Saturday, June 12, 2010

(11) உத்தம ஸஹாபாக்கள்

அபூபக்கர் சித்தீக் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களின் தகப்பனார்.)

அபூ பக்ர் அல்(ஸ்)சித்திக் ( ரலி அன்ஹு )

உமர் ஹத்தாப் (பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவி ஹஃப்ஷா அவர்களின் தகப்பனார்)

உமர் பின் கத்தாப் ( ரலி அன்ஹு )
உஸ்மான்
உஸ்மான் ( ரலி அன்ஹு )
அலி (பெருமானார்(ஸல்) அவர்களின் மகள் பாத்திமா அவர்களின் கணவர்)
அலி பின் அபிதாலிப் (ரலி அன்ஹு)
தல்ஹா இபுனு உபைதுல்லாஹ்
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி அன்ஹு)
ஜுபைரிபுனுல் அவாம்
ஜுபைர் பின் அவ்வாம் (ரலி அன்ஹு)
ஸஃப்து அபி வக்காஸ்
ஸஆத் பின் அபி வக்காஸ் (ரலி அன்ஹு)
ஸயீத் இபுனு ஜைத்
ஸயீத பின் ஜைத் (ரலி அன்ஹு)
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(செல்வந்தரான ஆனால் எளிமையான ஸஹாபி)
அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி அன்ஹு)
அபூ உபைதுனுல் ஜர்ராஹ்
அபூ உபைத் பின் ஜர்ராஹ் (ரலி அன்ஹு)
அப்பாஸ் இபுனு அப்துல் முத்தலிப்
அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி அன்ஹு)
ஜஃபர் இப்னு அபிதாலிப்
ஜாஃபர் பின் அபிதாலிப் (ரலி அன்ஹு)
ஹஸன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஹஸன் பின் அலி (ரலி அன்ஹு)
ஹுஸைன்(பெருமானாரின் (ஸல்)அருமைப்பேரர்)
ஹுஸைன் பின் அலி (ரலி அன்ஹு)
ஜைத் இபுனு ஹாரிஸா
ஜைத் பின் ஹாரிஸா (ரலி அன்ஹு)
உஸாமதுபுனு ஜைத்
உஸாமா பின் ஜைத் ( ஜாயித் ) (ரலி அன்ஹு)
அம்மார் இபுனு யாஸிர்
அம்மார் பின் யாஸிர் (ரலி அன்ஹு)
அப்துல்லாஹ் இபுனு மஸ்வூத்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி அன்ஹு)
அபூஸர் கிஃபாரி
அபூ ஸர் அல்கிஃபாரி (ரலி அன்ஹு)
ஹுதைஃப் இபுனு யமானி
((இது சரியா தெரியல ))

ஸஃது இபுனு முஆத்
ஸஅத் பின் முஆத் (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு ஜுபைர்
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு உமர்
அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் (ரலி அன்ஹு)
அப்துல்லாஹ் இபுன் அப்பாஸ்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி அன்ஹு)
பிலால் இபுனு ரிபாஹ்
பிலால் பின் ரிபாஹ் (ரலி அன்ஹு)
உமையுப் இபுனு கஃபு
உமைய்(யா ) பின் கஅ ப் (ரலி அன்ஹு)
அபு தல்ஹா அன்ஸாரி
அபூ தல்ஹா அன்ஸாரி (ரலி அன்ஹு)

ஸல்மான் பார்ஸி
ஸல்மான் ஃபார்ஸி (ரலி அன்ஹு)
அபு மூஸா அஸ் அரி
அபூ மூஸா அஸ் அரி (ரலி அன்ஹு)
அப்துல்லா இப்னு ஸலாம்
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி அன்ஹு)
ஜகீர் இபுனு அப்துல்லா
ஜாகிர் பின் அப்துல்லாஹ் (ரலி அன்ஹு)
ஜாபிர் இபுனு அப்துல்லா
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி அன்ஹு)
அனஸ் இபுனு மாலிக்
அனஸ் பின் மாலிக் (ரலி அன்ஹு)
பராஃ இப்னு மாலிக்
பராஹ் பின் மாலிக் (ரலி அன்ஹு)
ஸாபித் இபுனு கைஸ்

ஸாபித் பின் கைஸ் (ரலி அன்ஹு)
அதிய் இபுனு ஹாதிம்
அதிய்யா பின் ஹாதிம் (ரலி அன்ஹு)
அபு ஹுரைரா
அபூ ஹுரைரா ( ரலி அன்ஹு )
ஜுலைபில்
((இது சரியா தெரியல ))
ஹாரி ஸதுபுனு ஸுராகா
ஹாரிஸா பின் ஸுராகா (ரலி அன்ஹு)
காலிதிபுனும் வலித்
காலித் பின் வலீத் (ரலி அன்ஹு)
அம்ருப்னு ஆஸ்
அம்ரு பின் ஆஸ் (ரலி அன்ஹு)
அபு ஸுப்யான் இப்னு ஹர்ப்
அபூ ஸுஃப்யான் பின் ஹார்ப் (ரலி அன்ஹு)
முஆவியா
மு ஆவியா (ரலி அன்ஹு )


பெண் ஸஹாபியாக்கள்:

பாத்திமா
உம்முல் மூமினீன் ஃபாத்திமா அல் ஜொஹ்ரா பின்த் முஹம்மத் ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
மூமினீன்களின் தாய் என்ற அர்த்தத்தில் சொல்வது மிகவும் சரியானது நாம் கொடுக்கும் மரியாதை அது
ஆயிஷா

உம்முல் மூமினீன் ஆயிஷா பின்த் அபி பக்ர் (
ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )
ஸஃபியா
உம்முல் மூமினீன் ஸஃபிய்யா பின்த் ஹை ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )

ஸவ்தா

உம்முல் மூமினீன் ஸவ்தா பின்த்
ஸம் ஆ( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )

உம்மு ஐமன்

உம்மு ஐமன்
( ரலி ய்ல்லாஹு அன்ஹுமா )


(ரலியல்லாஹு அன்ஹுன்ன)

ஸஹாபாக்கள் பெயர்களில் திருத்தி தந்து மேலும் மெருகூட்டிய சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு நன்றி.

Friday, June 11, 2010

(10)நாயகத்தின் சவுந்தர்ய முத்திரை


கவிஞர் மூஸா பெருமானார் (ஸல்)அவர்களின் அழகுத்திருவுருவின் சவுந்தர்ய அங்க
வடிவினை அழகுற வர்ணித்து பாடிய நாயகத்தின் சவுந்தர்ய முத்திரை.

அந்தர மாமணச் சந்தன
வண்ணத்து மேனியர்
நீல ஆகாய மீதவர்
அம்புலி போல் முக ஜோதியார்

மந்தரம் நீந்திடு மால் மழை
போல் முடி சூடினார்
உச்சி வார்தருங் கோடதோ
வானத்து மின்னெனக்கூடினார்.

கங்கை வளர்ந்திருப் பங்கம்
மென்னும் விழியினார்
அடர் கானகக் குங்குமக்
கோவை பழுத்த இதழினார்.

சங்கெனத் தூங்கிய பூவிருஞ்
செம்மடற் காதினார்
வான் தாங்கிய கைப்பிடி
போல் நெடு நாசியின் வாசியார்

ரெத்தின வெள்ளைக் கிளற
அரும்பும் எயிற்றினார்
தங்க ரேகைக்கலச
கடைசலோ என்னும் மிடற்றினார்.

அத்தில் கிடக்கும்சமுத்திரம்
போல் வடி மார்பினார்
புடை ஆரமே போலெழு
வல்லமா நல்ல புயத்தினார்

பட்டுப்பொதிந்த செவ்வாம்பல்
மலர்ந்ததன் கையினார்
நல்ல பவளம் பதிந்த நுண்
தோடென மின்னும் நகத்தினார்

இந்த மேனி உய்யப்
பிறந்த முஹம்மதாம் தூதினார்.


நாயகம் (ஸல்)அவர்களை மற்ற நபிமார்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஆதம் (அலை)அவர்களை அதிகம் ஒத்திருப்பதாக சரித்திரங்கள் கூறுகின்றது.

ஒழுக்கதில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களைப் போலவும்

உடற்கட்டில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களைப் போலவும்)

அறிவில் நபி ஷீது (அலை) அவர்களைப் போலவும்)

சாதுர்யத்தில் நபி நூஹு(அலை) அவர்களைப் போலவும்

நாவன்மையில் நபி ஸாலிஹ்(அலை) அவர்களைப் போலவும்

அழகில் நபி யூஸுஃப்(அலை) அவர்களைப் போலவும்

சந்தத்தில் நபி தாவூத் (அலை) அவர்களைப் போலவும்

அன்பில் நபி தானியல் (அலை) அவர்களைப் போலவும்

துப்புரவில் நபி யஹ்யா (அலை) அவர்களைப் போலவும்

தக்வாவில் நபி ஈஸா (அலை) அவர்களைப் போலவும்
அறியப்பட்டார்கள்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்

Wednesday, June 9, 2010

(9) அறிந்துகொள்வோம்




வேதங்கள்:


வேதங்களின் எண்ணிக்கை நாண்கு.எத்தனையோ நபிமார்கள் அவதரித்திருந்தாலும் நாண்கு நபிமார்களுக்கு மட்டுமே வேதங்கள் இறக்கப்பட்டன்.110சுஹுபுகள் கொடுக்கப்பட்டது.சுஹுபுகளும்,வேதங்களும் கொடுக்கப்படாத நபிமார்களும் உண்டு.
வேதங்கள் கொடுக்கப்பட்ட நாண்கு நபிமார்கள்.:
1.மூஸா(அலை) - தவுராத்து வேதம் - இப்ராணி மொழியில் வழங்கப்பட்டது.
2.தாவூது(அலை) - ஸபூர் வேதம் - யூனானி மொழியில் வழங்கப்பட்டது
3.ஈஸா(அலை) - இஞ்ஜில் வேதம் - ஸுர்யாணி மொழியில் வழங்கப்பட்டது.
4.முஹம்மது(ஸல்) - புர்கான் வேதம் - அரபி மொழியில் வழங்கப்பட்டது.
வேதங்களும்,சுஹுபுகலும் புர்கான் வேதத்தைத்தவிர மற்றவைகள் எல்லாம் புர்கான் வேதத்தைக்கொண்டு மாற்றப்பட்டுவிட்டன.உலக முடிவு வரை புர்கான் வேதத்துடைய சட்டதிட்டங்கள் அமல் நடத்தப்பட்டே வரும்.

நாற்பெரும் கலீஃபாக்கள்:

1ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி)
2.ஹஜ்ரத் உமர் ஹத்தாப்(ரலி)
3.ஹஜ்ரத் உதுமான்(ரலி)
4.ஹஜ்ரத் அலி (ரலி)

ஐம் பெரும் இமாம்கள்:

1.இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா
2.இமாம் மாலிக்
3இமாம் ஷாஃபி
4இமாம் ஹம்பல்
5.இமாம் கஸ்ஸாலி

ஐம்பெரும் கடமைகள்:

1.கலிமா
2.தொழுகை
3.ஜக்காத்து
4.நோன்பு
5.ஹஜ்ஜு

ஒப்புக்கொள்ளப்பட்ட நாண்கு மதஹபுகள்:

ஷாஃபியீ
ஹனபீ
மாலிக்கீ
ஹன்பலி

Tuesday, June 8, 2010

(8) சொர்க்கம்,நரகம்.

சொர்க்கம்,நரகம்.


எட்டுவகை சொர்க்கம்:

1.தாருல் ஜலால்
2.தாருஸ் ஸலாம்
3.ஜன்னத்துல் மஃவா
4.ஜன்னத்துல் குல்து
5.ஜன்னத்துல் நயீம்
6.தாருல் கரார்
7.ஜன்னத்துல் பிர்தவுஸ்
8.ஜன்னத்துல் அத்னு

1.தாருல் ஜலால் என்ற சுவர்க்கத்தில்நபிமார்கள்,ரஸூல்மார்கள்,ஷுஹதாக்கள்,கொடையாளிகள் புகுவர்.
2.தாருஸ் ஸலாம் என்ற சுவர்க்கத்தில் முறைப்படி ஒளு எடுத்து பயபக்தியுடன் தொழுத பக்திமான்கள் புகுவர்.
3.ஜன்னத்துல் மஃவா என்ற சுவர்க்கத்தில் ஜகாத் கொடுத்தவர்கள் புகுவார்கள்.
4.ஜன்னத்துல் குல்து என்ற சுவர்க்கத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத்தடுக்கும் தியாகிகள் புகுவார்கள்.
5.ஜன்னத்துல் நயீம் என்ற சுவர்க்கத்தில் இச்சைகளை அடக்கி நேர்மையாக நடந்த உத்தமர்கள் புகுவார்கள்.
6.தாருல் கரார் என்ற சுவர்க்கத்தில் முறையாக ஹஜ்ஜு,உம்ரா செய்தவர்கள் புகுவார்கள்.
7.ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற சுவர்க்கத்தில் இஸ்லாத்திற்காக போரிட்ட அறப்போர் வீரர்கள் புகுவர்.
8.ஜன்னத்துல் அத்னு என்ற சுவர்க்கத்தில் இறைவனால் விலக்கப்படவைகளை விட்டு விலகிக்கொண்டு நாயகம் அவர்களின் சொல்,செயல்(சுன்னத்)படி வாழ்ந்த நல்லடியார்கள் புகுவர்

சுவர்க்கத்தின் காவலாளி - ரில்வான்

ஏழு வகை நரகம்:

1.ஜஹன்னம்
2.லழா
3.சக்கா
4.ஹுத்தமா
5.ஜஹீம்
6.சார்
7.ஹாவியா

1.ஜஹன்னம் என்ற நரகத்தில் முஹம்மது (ஸல்)அவர்களது உம்மத்துமார்களில் பெரும் பாவிகள் புகுவர்
2.லழா என்ற நரகத்தில் முனாபிகீன்கள் புகுவர்.
3.சக்கா என்ற நரகத்தில்யூதர்களும்,நஸாக்களும் புகுவார்கள்.
4.ஹுத்தமா என்ற நரகத்தில் மஜுஸிகள் புகுவார்கள்
5.ஜஹீம் என்ற நரகத்தில் இறைவனின் ஆணைக்கு உட்படாதவற்றை வணங்குவோர் புகுவர்.
6.சார் என்ற நரகத்தில் யஃஜூஜ்,மஃஜூஜ் கூட்டத்தினர் புகுவர்.
7.ஹாவியா என்ற நரகத்தில் பாவியான ஜின்களும்,ஷைத்தான்களும்,அல்லாஹ்வையும் ரசூலையும் பொய்யாக்கி வேதத்தை புறகணித்தோர் புகுவர்.

நரகத்தின் காவலாளி - மாலிக்

Monday, June 7, 2010

(7) நபிமார்களும் மலக்குமார்களும்




நபிமார்களின் எண்ணிக்கை 124000.இவர்களில் ரசூல்மார்கள் 313.குர் ஆன் வேதத்தில் சொல்லப்பட்ட நபிமார்கள் 25

1.ஆதம்
2.நூஹ்
3.இப்றாஹீம்
4.இஸ்ஹாக்
5.யாகூப்
6.யூஸுப்
7.லூத்
8.துல்கிப்ல்
9.யூனுஸ்
10.ஸகரிய்யா
11.யஹ்யா
12.இஸ்மாயீல்
13.ஹூத்
14.ஸாலிஹ்
15.ஷுஐப்
16.அல்யஸ் உ
17.இல்யாஸ்
18.தாவூத்
19.சுலைமான்
20.இத்ரீஸ்
21.ஐயூப்
22.மூஸா
23.ஹாரூன்
24.ஈஸா (அலைஹி முஸ்ஸலாத்து வஸ்ஸலாம்)
25.முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)

மலக்குமார்கள்

1.ஜிப்ராயீல்
2.மீக்காயீல்
3.இஸ்ராயீல்
4.அஸ்ராயீல்
5.முன்கர்
6.நகீர்
7.நகீம்
8.அதீத்
9.மாலிக்
10.ரிஸ்வான் (அலைஹி முஸ்ஸலாத்து வஸ்ஸலாம்)

பத்துமலக்குகள்.இவர்களில் மேன்மைக்குறியவர்கள் முதல் நாண்கு பேர்.மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்.பெற்றோர்கள் கிடையாது.ஸ்தூத சரீரம் கொண்டோர்.இவர்கள் ஆண்களும் அல்ல.பெண்களும் அல்ல.அல்லாஹ்வின் ஆணைகளுக்கு என்றென்றும் கீழ்படிந்தவர்கள்.அவர்களின் எண்ணிக்கை அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்.அவர்களுக்கு ஊன்,உறக்கம்,தாகம்,மறதி,இச்சை,மயக்கம்,அலுப்பு,வயதீகம்,மரணம் எதுவுமே கிடையாது.அல்லாஹ்வையே ஒவ்வொரு வினாடியும் தஸ்பீஹ்(சுபுஹானல்லாஹ்)தஹ்மீத்(அல்ஹம்து லில்லாஹ்)தக்பீர்(அல்லாஹு அக்பர்)தஹ்லீல்(லாயிலாஹ இல்லல்லாஹ்)செய்வது மட்டுமே.நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்கள் மேற்கண்ட பத்து பேர்கள் மட்டிலுமே.

Friday, June 4, 2010

(6) மாநபி(ஸல்)அவர்களின் முன்னோரும்,பின்னோரும்.


1.அதானான்
2.முஃது
3.நஸா
4.முளர்ரு
5.இல்யாஸ்
6.முத்ரிகா
7.குஸைமா
8.சனானா
9.நள்ரு
10.மாலிக்
11.பிஹ்ரு(குரைஷி வம்சம் இவரில் இருந்து ஆரம்பம் என சரித்திரங்கள் கூறுகின்றது)
12.காலிப்
13.லுவையூ
14.கஃபு
15.முர்ரா
16.கிலாப்
16.குஸையு
17.அப்துல் முனாஃப்
18.ஹாஷிம்
19.அப்துல் முத்தலிப்
20.அப்துல்லாஹ்
21.முஹம்மத் நபி(ஸல்)
22.பாத்திமா
23.ஹுசைன்
24.ஆபிதீன்
25.முஹம்மது பாக்கிர்
26.ஜஃபர் ஸாதிக்
27.முஹம்மத்
28.செய்து ஜலாலுதீன்
29.செய்யிது அபு முஹம்மது கமால்
30.செய்யிது தாவூத்
31.செய்யிது ஜமாலுல் கரீம்
32.செய்யிது அபு ஹுஸைன்
33.செய்யிது இஸ்மாயிலுல் கரீம்
34.செய்யிது முஹம்மது நசீர்
35.செய்யிது அபு யூஸுஃப்
36.செய்யிது அப்துல் கபூர்
37.செய்யிது அஹ்மது வலியுல்லாஹ்
38.செய்யிதுனா சுல்தான் செய்யது இப்ராஹீம்

ஆதாரம்:இமாம் புஹாரி(ரஹ்)நபித்துவம் பற்றிய தலைப்பில் பெருமானார் (ஸல்) அவர்களின் தலைமுறைகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

Thursday, June 3, 2010

(5) நபி வழி



இறைஞானம் - என் மூலதனம்

பகுத்தறிவு - என் பக்தி

அன்பு - என் அடிப்படை

ஆர்வம் - என் வாகனம்

தியானம் - என் தோழன்

உறுதி - என் உடமை

துக்கம் - என் துணைவன்

அறிவு - என் ஆயுதம்

பொறுமை - என் போர்வை

திருப்தி - என் வெற்றி

ஏழ்மை - என் பெருமை

தியாகம் - என் கலை

நன்நம்பிக்கை - என் வல்லமை

உண்மை - என் வழிகாட்டி

பணிவு - என் நிறைவு

போராட்டம் - என் பிறவிக்குணம்

இறைவணக்கம் - என் இன்பம்

பெருமை - என் பரிவட்டம்

கவுரவம் - இடுப்பாடை

Wednesday, June 2, 2010

(4) அரபிப்பதங்களின் கருத்துரை




முஃமின்
- இறை நம்பிக்கை உடையவன்
பித் அத் - நூதனச்செயல்
ரிவாயத் - அறிவிப்பு
குஃப்ர் - நிராகரிப்பு
நிஃபாக் -நயவஞ்சகம்

ஃபிஸ்க் - பெரும்பாவம்
தாத் - சுயதன்மை
ஸிஃபாத் - இறைமையின் சிறப்பியல்புகள்
முஷ்கிரின் - இணைவைப்போர்
காஃபிர் - நிராகரிப்போர்

தக்வா - இறையச்சம்
முஹாஜிர் - இறைவனுக்காக அனைத்தையும் துறத்தல்
ஹுக்குல்லாஹ் - இறைவனுக்கு ஆற்றவேண்டிய கடமைகள்
ஹுக்குல் இபாத் - மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள்
முஜாஹித் - இறைவழியில் போர் புரிபவர்

சஹாபாக்கள் - தோழர்கள்
ஈமான் - நன்நம்பிக்கை
ஸபுர் - பொறுமை
தவ்பா - மன்னிப்புக்கொருதல்
ஹிதாயத் - அருள்வழி

ழளலத் - இருள் வழி
அமீர் - தலைவர்
ஷிர்க் - இணைவைத்தல்]
அலைஹிஸ்ஸலாம்(அலை) - அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக
ஆலம் - உலகம்

ஆபித் - வணக்கவாளி
இபாதத் - வணக்கம்
கவ்பு - அச்சம்
குத்ரத் - இறை சக்தி
தவக்கல் - பாரஞ்சாட்டுதல்

தவ்பா - வலம்(சுற்றி)வருதல்
திக்ர் - தியானம்
துன்யா - இம்மை
நப்ஸ் - கீழான இச்சையுள்ள மனம்
நிஹ்மத் - அருட்கொடை

நிய்யத் - நிர்ணயம்
பித்னா - குறும்பு,குழப்பம்
முனாபிக் - நயவஞ்சகம்
கராமத் - ஆச்சரிய சம்பவம்
கிஸ்ஸா - சரித்திரம்

பயான் - விளக்கம்
ஷுக்ரு - நன்றி
அஜல் - முடிவு
தவாபு - நன்மை
இஸ்ஸத் - கண்ணியம்

தில்லத் - கேவலம்
நஃப்ஸுன் - ஆத்மா
ஃபர்ளு - கட்டாயக்கடமை
வாஜிப் - கடமை(ஃபர்ளுவுக்கு அடுத்த ஸ்தானம்)
சுன்னத் - நபி(ஸல்)அவர்கலின்நடைமுறை

சுன்னத் முஅக்கதா - நபி (ஸல்)அவர்கள் தொடர்ந்து செய்துவந்தவைகள்
சுன்னத் ங்ஐரு முஅக்கதா - நபி(ஸல்)அவர்கள் தொடர்ச்சியாக செய்து வராதவைகள்
முஸ்தஹப்பு - விருமபத்தக்கவை
மஃரூஹ் - வெறுக்கதக்கவை
ஹலால் - அனுமதிக்கப்பட்டவை

ஹராம் - தடுக்கப்பட்டவை
ஜாயிஸ் - செய்யக்கூடியவை
மஃரூஹ் தஹ்ரிம் - ஹராமுக்கு நெருக்கமாக உள்ளவை
ஷர்த்து - நிபந்தனை
முதஷாபஹாத் -சந்தேகத்துக்குறியவை(செய்யாமல் இருப்பது நலம்)

மவ்லானா - தலைவர்(மார்க்கபெரியார்களை அழைப்பது)
ஆலிம் - அறிந்தவர்(மார்க்காறிவைப்பெற்றவர்களை அழைக்கும் சொல்)
உலமா - ஆலிமின் பன்மை
ஷெய்க் - பெரியவர்,தலைவர்
பேஷ் இமாம் - முன் நின்று தொழுகை நடத்துபவர்

கலீபா - பிரதிநிதி
முஸாபிர் - பிரயாணி
ஃபாஸிக் - பாவி
முத்தக்கீன்கள் - பயபக்தியாளர்கள்
ஸாலிஹீன்கள் - நல்லவர்கள்

ஷுஹதாக்கள் - அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்
நவ்முஸ்லிம் - புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர்கள்
மஃமூம்.முஅத்தி - அதானுக்கு அழைப்பவர்
கவ்ம் - வகுப்பினர்
ஜமா அத் - கூட்டு,கூட்டம்

மஷ்வரா - ஆலோசனை
தஃலிம் - மார்க்கநூல்களி வாசித்தல்,கற்றுக்கொடுத்தல்
மஜ்லிஸ் - சபை
இஃலாஸ் - மனத்தூய்மை,நன்நம்பிக்கை
யஃகீன் - உறுதி,பயபக்தி

அப்து - அடிமை
ஆபித் - வணக்கவாளி
முனாபிக் - நயவஞ்சகன்
யஹூதி - யூதர்கள்
மஜூஸி - நெருப்பை வணக்குவோர்

நஸாரா - கிருத்துவர்
முஷ்ரிக் - இணைவைப்போர்
காஃபிர் - இணைவைப்போர்
கீபத் - புறம்பேசுதல்
முஃஜிஸாத் - நபிமார்கள் செய்த அற்புதங்கள்

சஹாபாக்கள் - நாயகத்தை சந்தித்த முஸ்லிம்கள்
சஹாபியாக்கள் - சஹாபா பெண்பால்
தாபியீன்கள் - சஹாபாக்களை சந்தித்த முஸ்லிம்கள்
தபுதாபியீன்கள் - தாபியீன்களை சந்தித்த முஸ்லிம்கள்
வலிமார்கள் - இறைநேசர்கள்

அவுலியா - வலியின் பன்மை
இமாம்கள் - வழிகாட்டிகள்
புக்கஹாக்கள் - சட்டநிபுணர்
சூஃபியாக்கள் - ஆத்ம ஞானிகள்
முபஸ்ஸிரீன்கள் - குர் ஆன் விரிவுரையாளர்கள்

முஹத்தினிர் - ஹதீஸை ஒன்று திரட்டிய இமாம்கள்
அன்ஸாரிகள் - தீனுக்காக ஹிஜ்ரத் செய்துவந்தவர்களுக்கு உதவியவர்கள்
முஜ்தஹீதுகள் - குர் ஆன் ஹதீஸை ஆராய்ந்து,மார்க்கசட்டங்களை வகுத்துகொடுத்தவர்கள்(நாற்பெரும் இமாம்கள்)
இஃலாஸ் - மனத்தூய்மை,நன்நம்பிக்கை