அறிந்து கொள்ளுங்கள்.
உலகில் இமைக்கும் நேரம் கூட அல்லாஹ்விற்கு மாறு செய்யாதவர்கள்.
1.அலி இப்னு அபிதாலிப்
2.ஸூரா யாஸீனில் வரும் ஹபீப் இப்னு நஜ்ஜார்
3.மூஸா (அலை)அவர்களை இறைத்தூதர் என ஏற்று இறை நம்பிக்கை கொண்ட கிஜுபீலு எனும் தச்சர்.
மலக்குல் மவுத்:
ரஜப் மாதம் முதல் நாள் செவ்வாய்க்கிழமை அன்று இறைவனால் இஸ்ராயீல் அவர்களுக்கு "மலக்குல் மவுத்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
ஆதம் (அலை)
ஆதம் (அலை)அவர்களை உயிர்ப்பித்து முதல் மாமனிதராக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட நாள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும்.
வானவர்களுக்கு இறைவன் வழங்கிய பட்டம்:
1.ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு நபிமார்களுக்கு புனித செய்திகளை எடுத்து செல்லும் புனித தூதுவர் பட்டம்.
2.மீக்காயீல் (அலை) அவர்களுக்கு இரணத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.
3.இஸ்ராஃபீல்(அலை) அவர்களுக்கு உலக முடிவு நாளில் "சூர்" ஊதும் பொறுப்பு.
4.இஸ்ராயீல்(அலை) அவர்களுக்கு நண்பர்களை நண்பர்களோடு சேர்த்து வைக்கும் பொறுப்பு.
சிறப்பு மிக்கவை:
நாட்களில் சிறப்புடையது வெள்ளிக்கிழமை.
மாதங்களில் சிறப்புடையது ரமலான் மாதம்.
மனிதர்களில் சிறப்புடைவர் ஆதம் (அலை)
நபிமார்களில் சிறப்புடையவர் ரஸூல் -( ஸல்)
வணக்கங்களில் சிறப்புடையது ஸலவாத்து.
திருக்குர் ஆனில் சிறப்புடையது சூரத்துல் கஃபு
படித்ததில் பதிந்தவை.
7 comments:
அருமையான விளக்கங்கள்.. தொடருங்கள் ஸாதிகா அக்கா.
அல்லாஹ் என்னும் இடத்தில் ஆல்லாஹ் என்று எழுத்துப்பிழை உள்ளது. திருத்திக் கொள்ளுங்கள் ஸாதிகா அக்கா.
திருத்தி விட்டேன் என்பதிலும் பிழை இருக்கு அக்கா, அதையும் பார்த்துக்கோங்க. அருமையான இடுகை. இனி அடிக்கடி உங்கப் பக்கம் வந்துட வேண்டியது தான்.
ஷேக்.எழுத்துப்பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.திருத்தி விட்டேன்.
//திருத்தி விட்டேன் என்பதிலும் பிழை இருக்கு அக்கா, அதையும் பார்த்துக்கோங்க. அருமையான இடுகை. இனி அடிக்கடி உங்கப் பக்கம் வந்துட வேண்டியது தான்.// வாங்க சகோதரர் அப்துல்காதர்.மீண்டும் கவனமாக திருத்தி விட்டேன்.கீபோர்ட் "வாங்கிய காசை விட அதிகமாக உழைத்துவிட்டேன்" என்று இப்பொழுது அழிச்சாட்டியம் பண்ணுகின்றது.அதான் அப்பப்ப இப்படி படுத்தாமல் படுத்துகின்றது.(அப்பா..ஒரு வழியாக கீபோர்ட் மீது பழியைப்போட்டாச்சு.)
அருமையான பதிவு..!!
நன்றி சகோதரர் ஜெய்லானி
Post a Comment