Wednesday, June 23, 2010
(13) இஸ்லாம் இயம்பும் பொறுமையும் விருப்பங்களும்
பொறுமைகள் பலவிதம்.
1.வயிற்றின் ஆசையை நிறைவேற்றுவதின்மீது பொறுமை இதற்கு போதுமென்ற தன்மை என்று பொருள்.
2.வறுமை ஏற்படுவதின் மீது பொறுமை இதற்கு நற் பொறுமை எனப்பொருள்.
3.பொருள் வசதி ஏற்படுவதின் மீது பொறுமை.இதற்கு நப்ஸை கட்டுப்படுத்தல் என்று பெயர்.
4.உடல் இச்சைகளை நிறைவேற்றுவதின் மீது பொறுமை . இதற்கு பத்தினித்தனம் என்று பொருள்.
5.போர் புரிவதின் மீது பொறுமை இதற்கு வீரம் என்று பொருள்.
6.கோபம் ஏற்படுவதின் மீது பொறுமை இதற்கு சாந்தம் என்று பொருள்.
7.துன்பங்கள் ஏற்படுவதின் மீது பொறுமை இதற்கு நெஞ்சத்தின் பிரிவு என்று பொருள்.
8.இரகசியத்தை மறைப்பதின் மீது பொறுமை இதற்கு மறைத்தல் என்று பெயர்.
9.வீணான பகட்டு வாழ்க்கையின் மீது பொறுமை இதற்கு பற்றின்மை என்று பொருள்.
10.எதிர் பாராத விஷயங்கள் ஏற்படும் பொழுது வரும் பொறுமை இதற்கு மனோதிடம் என்று பொருள்.
முஃமீன்கள் விரும்பும் விருப்பங்கள்.
1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.
2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.
3.அறிய விரும்பினால் நன்மையின் நலவுகளையும்,தீமையின் விபரீதங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதை மட்டும் கொடுங்கள்.
5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.
6.பேச விரும்பினால் இன்சொற்களை பேசுங்கள்.
7.அடிக்க விரும்பினால் மனோ இச்சைகளை அடித்து விரட்டுங்கள்.
8.களைய விரும்பினால் துர்பழக்கத்தை களைந்து விடுங்கள்.
9வெறுக்க விரும்பினால் ஹராம்களை வெறுத்து விடுங்கள்.
10.மறைக்க விரும்பினால் பிறர் உங்களை நம்பி கூறிய சொற்களை மறைத்து விடுங்கள்.
Labels:
இஸ்லாம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அருமையான கருத்துகள் ஸாதிகா அக்கா. பொறுமையில் இத்தனை பொறுமை இருக்கா.. அதுக்குதான் பொறுமையா இருன்னு சொல்றாங்களா..
உடன் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ஸ்டார்ஜன்.பொறுமையைப்பற்றி நிறைய குறிப்புகள் மற்றும் ஹதீஸ்களும்.வரலாறுகளும் நிறைய உள்ளது.அவ்வப்போது பதிவிடுகின்றேன்.
ரொம்பவும் பொருமையா மூனுதடவை படிச்சேன் . ரொம்பவும் அருமையா இருக்கு..
அருமையான இடுகை,பொறுமையின் வகையும்,முஃமீன்களின் விருப்பமும் எடுத்து சொன்னமைக்கு நன்றி.நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டியது.
Assalamu Aleykum dear sister,
jazakallah khair for this interesting article !!!
Excepting more article like this !!!
Your sister,
M.Shameena
Post a Comment