Friday, June 11, 2010
(10)நாயகத்தின் சவுந்தர்ய முத்திரை
கவிஞர் மூஸா பெருமானார் (ஸல்)அவர்களின் அழகுத்திருவுருவின் சவுந்தர்ய அங்க
வடிவினை அழகுற வர்ணித்து பாடிய நாயகத்தின் சவுந்தர்ய முத்திரை.
அந்தர மாமணச் சந்தன
வண்ணத்து மேனியர்
நீல ஆகாய மீதவர்
அம்புலி போல் முக ஜோதியார்
மந்தரம் நீந்திடு மால் மழை
போல் முடி சூடினார்
உச்சி வார்தருங் கோடதோ
வானத்து மின்னெனக்கூடினார்.
கங்கை வளர்ந்திருப் பங்கம்
மென்னும் விழியினார்
அடர் கானகக் குங்குமக்
கோவை பழுத்த இதழினார்.
சங்கெனத் தூங்கிய பூவிருஞ்
செம்மடற் காதினார்
வான் தாங்கிய கைப்பிடி
போல் நெடு நாசியின் வாசியார்
ரெத்தின வெள்ளைக் கிளற
அரும்பும் எயிற்றினார்
தங்க ரேகைக்கலச
கடைசலோ என்னும் மிடற்றினார்.
அத்தில் கிடக்கும்சமுத்திரம்
போல் வடி மார்பினார்
புடை ஆரமே போலெழு
வல்லமா நல்ல புயத்தினார்
பட்டுப்பொதிந்த செவ்வாம்பல்
மலர்ந்ததன் கையினார்
நல்ல பவளம் பதிந்த நுண்
தோடென மின்னும் நகத்தினார்
இந்த மேனி உய்யப்
பிறந்த முஹம்மதாம் தூதினார்.
நாயகம் (ஸல்)அவர்களை மற்ற நபிமார்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஆதம் (அலை)அவர்களை அதிகம் ஒத்திருப்பதாக சரித்திரங்கள் கூறுகின்றது.
ஒழுக்கதில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களைப் போலவும்
உடற்கட்டில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களைப் போலவும்)
அறிவில் நபி ஷீது (அலை) அவர்களைப் போலவும்)
சாதுர்யத்தில் நபி நூஹு(அலை) அவர்களைப் போலவும்
நாவன்மையில் நபி ஸாலிஹ்(அலை) அவர்களைப் போலவும்
அழகில் நபி யூஸுஃப்(அலை) அவர்களைப் போலவும்
சந்தத்தில் நபி தாவூத் (அலை) அவர்களைப் போலவும்
அன்பில் நபி தானியல் (அலை) அவர்களைப் போலவும்
துப்புரவில் நபி யஹ்யா (அலை) அவர்களைப் போலவும்
தக்வாவில் நபி ஈஸா (அலை) அவர்களைப் போலவும்
அறியப்பட்டார்கள்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்
Labels:
முஹம்மது(ஸல்)
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
''ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்''
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்.
ஜெய்லானி,ஸ்டார்ஜன் ரொம்ப சந்தோஷம்.நன்றி.
Post a Comment