Wednesday, June 2, 2010

(3) இமாமுல் அஃலம் அபு ஹனீஃபா(ரஹ்)



அபு ஹனீஃபா(ரஹ்)அவர்களின் இயற்பெயர் நூஃமான்பனு ஸாபித் என்பதாகும்.இவருக்கு ஹனீஃபா என்ற மகள் இருந்தார்.அபூ ஹனீஃபா அறிவிலும்,ஐயத்தை அழகுற தெளிய வைப்பதிலும் மகா வல்லவர்.பொதுமக்களின் அரிய வினாவிற்கு
தெளிய பதில் அளிப்பதில் நிபுணர்.அவரது அறிவாற்றலை,சமூக அறிவை,நினைவுத்திறனை கண்டு நெகிழ்ந்த ஒரு பெரியார் அவரது பேரறிவைப்பாராட்டி அன்றில் இருந்து அபூ ஹனிஃபா என்று அழைத்தார்.(ஹனீஃபா என்ற பெண்ணின் தந்தை) அதுவே இமாமுல் அஃலம் அபூ ஹனீஃபா என்று புகழ் பெற்றது.

அபு ஹனிஃபா அவர்களின் அறிவுத்திறனுக்கும்,ஆற்றலுக்கும் வரலாற்றில் பல பொன்னேடுகள் பதியப்பட்டுள்ளன.இன்ஷா அல்லாஹ் வரும் இடுகைகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.எடுத்துக்காட்டுக்கு இப்பொழுது ஒன்றை நினைவு கூறுகின்றேன்.

இறைவன் இருக்கின்றானா?இல்லையா என்று மிகப்பெரிய வாக்குவாதமே நடந்த நேரம் அது.."இறைவன் இல்லை"எனச்சொல்லி தர்கிக்க ஒரு பெரும் கூட்டம்."இறைவன் இருக்கின்றான்"என்று கூற எதிரணியில் இமாம் அவர்கள் மட்டும்.குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட்ட நேரத்தில் இரு தரப்பாரும் கூடி விவாதிப்பது என்று முடிவாகியது.குறிப்பிட்ட நேரப்படி இமாம் அவர்கள் கூட்டத்திற்கு வந்து சேரவில்லை.நாத்திககூட்டத்திற்கு அவர் வரத்தாமதமாகியதும் பெருத்த உற்சாமாக போய் விட்டது.

"அபூ ஹனிஃபா தோற்று விட்டார்.அவரால் இறைவன் உண்டு என்று நிரூபிக்க இயலவில்லை.நம்மை எதிர் கொள்ள அஞ்சுகின்றார்.அதுதான் ஆளே வரவில்லை"என குதூகலக்குரல் கொடுத்து ஆர்பரித்து சிலாகித்த வேளையில் இமாம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

"உங்களின் வருகையின் தாமதமே உங்களின் தோல்வியை பறை சாற்றிவிட்டது.இப்பொழுதாவது இறைவன் இல்லை என்று ஒத்துக்கொள்கின்றீர்களா" என அந்நாத்திகவாதிகள் கேட்டபொழுது அபு ஹனிஃபா சொன்னார்கள்.

"குறிப்பிட்ட நேரப்படி இங்கே வந்து சேரவேண்டும் என்றுதான் புறப்பட்டேன்.வரும் வழியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது.அதனால் எப்படி வெள்ளத்தைக்கடந்து வருவது என்று தயங்கி நின்ற பொழுது ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்ந்தது.கரையோரம் நின்ற ஒரு பெரிய மரம் அந்த பெரும் வெள்ளத்தில் தானாக சாய்ந்து விழுந்தது.துண்டு துண்டாக சிதறி,அழகான பலகைகளாக மாறியது.அந்தப்பலகைகள எல்லாம் என் கண் முன்னரே தானாக ஒன்று சேர்ந்து பெரிய அழகான படகாக உருப்பெற்று என் அருகில் வந்தது.நான் அதில் ஏறி இக்கரைக்கு வந்து சேர்ந்தேன்.அதுதான் என் தாமதத்தின் காரணம்"

மேற்கண்டவாறு இமாம் அவர்கள் சொன்னதைக்கேட்ட நாத்திகவாதிகள் ஏளனமாக சிரித்த வண்ணம்"தானாக ஒரு மரம் பலகைகள் ஆகி,அந்தப்பலகைகள் தானாக இணைந்து படகாக எப்படி முடியும்? தாங்கள் கூறுவது நகைப்பைத்தருகின்றது.இதை எல்லாம் நாங்கள் நம்புவோம் என்று நினைக்கின்றீர்களா?" என்று சிரித்தனர்.

அதற்கு இமாம் அவர்கள் நிதானமாக "உருவாக்குவோன் இல்லாமல் எப்படிஒரு படகு உருவாக முடியாதோ அதே போல்தான் இவ்வுலகமும்.அதன் இயக்கமும். கர்த்தா,இயக்குனன் இன்றி இவ்வுலகம் இயங்காது.அந்த இயக்குனன் தான் இறைவன்"என்றார்கள்.இதைக்கேட்ட பின் அந்த நாத்திகவாதிகள் மூச்சுவிடவில்லை.தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

7 comments:

ஜெய்லானி said...

நல்ல தொகுப்பு. தொடருங்கள் :-)))

ஒரு கேள்வியில் தந்தையையே விஞ்சும் அளவுக்கு மகள் ஹனிஃபா அவர்கள் அழகாக தெளிவாக பதில் குடுத்ததாலும் அவருக்கு இவர் ஹனிஃபாவின் தந்தை அபூ ஹனிஃபா என்று அன்புடன் மக்கள் அழைத்தனர்.((பொதுவாக அந்த காலத்தில் மகளை பெயர் கொண்டு தந்தையை யாரும் அழைப்பதில்லை ))

ஸாதிகா said...

இவ்விடயம் நான் அறிந்து இருக்கவில்லை சகோதார் ஜெய்லானி.அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஸாதிகா அக்கா.. இமாம் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை அறிந்து கொண்டேன். தொடருங்கள். இறைவன் நாம் நாடிய காரியங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன். நன்றி அக்கா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அக்கா., கமாண்ட் பாக்ஸில் அந்த சொல் சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.

மின்மினி RS said...

நல்ல தகவல்கள் ஸாதிகா அக்கா.

ஸாதிகா said...

ஸ்டார்ஜன் தம்பி.//இறைவன் நாம் நாடிய காரியங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்// வரிகளுக்கு மகிழ்ச்சி ,நன்றி.// கமாண்ட் பாக்ஸில் அந்த சொல் சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.//உங்கள் உத்தரவு நிறைவேற்றப்பட்டது.நன்றி.

ஸாதிகா said...

மின்மினி,கருத்துக்கு மிக்க நன்றி!