1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.
2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.
3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.
5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.
6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.
7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும்,துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.
8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும்,முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.
9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும்,தூயவனவற்றையும் உண்ணுங்கள்.
10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும்,உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்
Friday, October 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.//
உள்ளே போனா செரிக்க மாட்டேங்கிறதே..!!! என்ன செய்யலாம் டாக்டர் ஸாதிகாக்கா ..!!
கருத்துக்கு நன்றி ஜெய்லானி.நீங்கள் ஜோவியலாக கேட்ட கேல்விக்கு சீரியஸான பதில் அவூது பில்லாஹி மினஸ்ஸைத்தான் நிர்ரஜீம் என்று கூறி குளிர்ந்த நீரை குடித்து விடுங்கள்.கோபம் பறந்துவிடும்.இல்லையேல் குளித்து விடுங்கள்.கோபம் மறந்து விடும்.செயல் முறைபடுத்தி விட்டு ரிஸல்ட்டை கூற மறந்து விடாதீர்கள்.(ஆஹா..எனக்கும் பச்சப்பூ கையாலே டாக்டர் பட்டமா..பலே..)
அருமை அருமை.விருப்பம்-அனைவரும் பின்பற்ற வேண்டியது.
//நீங்கள் ஜோவியலாக கேட்ட கேல்விக்கு சீரியஸான பதில் அவூது பில்லாஹி மினஸ்ஸைத்தான் நிர்ரஜீம் என்று கூறி குளிர்ந்த நீரை குடித்து விடுங்கள்.கோபம் பறந்துவிடும்.இல்லையேல் குளித்து விடுங்கள்.கோபம் மறந்து விடும்.செயல் முறைபடுத்தி விட்டு ரிஸல்ட்டை கூற மறந்து விடாதீர்கள்//
அவூது பில்லாஹி மினஷைத்தா நிர்ரஜீம் ஓக்கே..!! குடிக்கவும் , குளிக்கவும் தண்ணியிலாத இடத்தில என்ன செய்ய ..!!
தவறாது வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழி ஆசியா!
//குடிக்கவும் , குளிக்கவும் தண்ணியிலாத இடத்தில என்ன செய்ய ..!// ஆரம்பிச்சாச்சா?தயம்மும் செய்துவிடுங்கள்.
முத்தான பத்து விருப்பங்களும் அருமை ஸாதிகா அக்கா.
மிக்க நன்றி ஜலி.
அருமையான கருத்துக்கள் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது. நன்றி.
Post a Comment