
அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்களின் மவுனம்
முதலாம் கலீஃபா ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் பெரும்பாலும் மவுனத்தையே அனுஷ்ட்டித்தார்கள்.அதிகமாக பேசுவதற்குறிய அபாயத்துக்கு அஞ்சி அதிகம் பேசுவதை வெறுத்தார்கள்.
ஒரு சமயம் உமர் (ரலி) அவர்கள் சித்தீக்(ரலி) அவர்களிடம் வந்து உரையாடத்தொடங்கினார்கள்.அது சமயம் சித்தீக் (ரலி) அவர்கள் தமது வாயில் இருந்த கற்களை எடுத்துவிட்டு பேசத்தொடங்கினார்கள்.
அது கண்டு உமர்(ரலி) அவர்கள் "என்ன காரணத்தினால் வாயில் கற்களை வைத்திருக்கின்றீர்கள்"எனக்கேட்டார்கள்.
அதற்கு சித்தீக் (ரலி) அவர்கள் "வாய் சும்மா இருந்தால் எதாவது வீண் பேச்சுக்கள் பேசும்.'வீண்பேச்சுக்கள் பேசுவதால் மனிதனின் உள்ளம் ஒளி மங்கி விடும்'என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதை நான் பல முறை கேட்டு இருக்கின்றேன்.ஆகவே என்னில் இருந்து வீண்பேச்சுக்கள் வெளிப்பட்டு இருக்காமல் இருக்க வாயில் கற்களை வைத்திருக்கின்றேன்.தேவைப்படும் பொழுது அதனை எடுத்துவிட்டு பேசுவேன்"என்றார்கள்;
தாஹா நபியின் தங்க உரைகள்:
ஆதமுடைய மக்களின் அநேக தவறுகள் அவர்களுடைய நாவுகளால் உண்டாகின்றன.
"இபாதத் (வழிபாட்டில்) மிகவும் எளிதானது மவுனம் கொண்ட நாவும், நற்குணமும் ஆகும்."
"நீ நல்லதையே பேசு, இல்லையேல் மவுனமாக இரு."
"யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார். வயிறு, வெட்க உறுப்பு, நாவு இவற்றின் தீங்கை விட்டும் காக்கப்பட்டவர் எவரோ அவர் முழுவதும் காக்கப்பட்டவர் ஆகிறார்."
"எவன் அதிகம் பேசுவானோ, அவன் அதிகம் தவறு உள்ளவனாக இருப்பான். எவன் தவறுகள் உள்ளவனாக இருப்பானோ, அவன் அதிகம் பாவம் உள்ளவனாக இருப்பான். அவனுக்கு நரகம் மேலானதாகும்."
6 comments:
அட ஸாதிகா,நல்ல ஐடியா,வாயில் கல்லை வச்சுக்க வேண்டியது தான்.
//"நீ நல்லதையே பேசு, இல்லையேல் மவுனமாக இரு."//
நல்லது :)))
//அட ஸாதிகா,நல்ல ஐடியா,வாயில் கல்லை வச்சுக்க வேண்டியது தான்// சுவன நற்பேறு பெற்ற உத்தமர் போல் நம்மால் முடுயுமா ஆசியா.என்றென்றும் இறைவன் நம் நாவை பேணும் ஆற்றலை தந்தருளவேண்டும்.கருத்துக்கு நன்றி ஆசியா.
////"நீ நல்லதையே பேசு, இல்லையேல் மவுனமாக இரு."//
நல்லது :)// எவ்வளவு அழகான பொன்மொழி.எந்த மனைதர்கள் உலகில் இதைப்பேணுகின்றனர்?
"நீ நல்லதையே பேசு, இல்லையேல் மவுனமாக இரு."
படிக்கும் போதே ரொம்ப நல்ல இருக்கு ஸாதிகா அக்கா
கருத்துக்கு ரொம்ப சந்தோஷம் ஜலி.
Post a Comment