ஹஜருல் அஸ்வத்
இதன் பொருள் 'கருப்புக்கல்' என்பதாகும்.இது கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது.அரைவட்ட வடிவில் உள்ள இது ஆறு அங்குல உயரமும்,எட்டு அங்குல அகலமும் உள்ளதாகும்.இது தண்ணீரில் மிதக்கும் தன்மை உடையதாகும்."வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக்கொண்டுவந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்(ஆதாரம் திர்மிதி)
இந்தக்கல் ஒளி வீசக்கூடியதாக இருந்தது என்று அது ஒளி பாய்ந்த இடங்கள் வரை புனிதபூமி (ஹரம்) என்று நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தின் போது இது அபுகுபைஸ் மலையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
இப்ராஹீம் (அலை)அவர்கள் கஃபாவை கட்டிய பொழுது ,ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள்.அது கஃபாவை தவாஃப் செய்வதற்கு துவக்க இடமாக ஆக்கப்பட்டுள்ளது.
பிறகு பனூ ஜர்ஹம் கூட்டத்தார் மக்காவை காலி செய்த பொழுது இதை ஜம்ஜம் கிணற்றுக்குள் போட்டு புதைத்து விட்டு சென்றனர்.பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டும் பொழுது இதனை கண்டு பிடித்து எடுத்து கஃபாவில் இதற்குறிய மூலையில் பதித்தார்கள்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 35 வயதானபொழுது கஃபா புனர் நிர்மானம் செய்யப்பட்ட சமயம் இந்தக்கல்லை அதற்குறிய இடத்தில் எடுத்து வைக்கும் சிறப்பு நபி(ஸல்) அவர்களுக்கே கிடைத்தது.ஹிஜ்ரி 64 இல் ஏற்பட்ட நெருப்பால் இது மூன்று துண்டுகளாக உடைந்தது.அதை இபுனு ஜுபைர்(ரலி)அவர்கள் வெள்ளிக்கம்பியால் பிணைத்து இதற்குறிய இடத்தில் பிணைத்தனர்.
நபி(ஸல்) அவர்கள் இதனை முத்தமிட்டுள்ளார்கள்.மேலும் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு தம் கைத்தடியால் தொட்டு கைத்தடியின் நுனியை முத்தமிட்டுள்ளார்கள்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ)
ஹாஜிகள் அதனை முத்தமிடுவது சுன்னத்.எனினும் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது மற்றவர்களைத் தள்ளி முண்டியடித்துச் செல்வது கூடாது.கூட்ட நேரத்தில் அதன் பக்கம் கையை காட்டி அதனை முத்தமிடுவது சிறந்ததாகும்
நன்றி:
தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொஸைட்டி
6 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஹஜருல் அஸ்வத் குறித்து அருமையான பதிவு. //கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது மற்றவர்களைத் தள்ளி முண்டியடித்துச் செல்வது கூடாது// என்பதற்கிணங்க அத்தகைய கல்லுக்கு எந்த வித தெய்வீக தன்மையும் இல்லை என்பதை உணர்த்த இந்த ஒரு செய்தியும் சேர்ந்திருந்தால் படிப்போர்களுக்கு மேலும் பயனளிக்கும்.
தமிழ் புஹாரி
எண்:1597, ஆபிஸ் இப்னு ரபீஆ அறிவித்தார்.
உமர்(ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்.
//"மறுமை நாளில் இதற்கு இரு கண்கள்,நாவு,இருக்கும்.தன்னை முத்தம் இட்டவர்களை அடையாளம் காட்டும் "// இது குறித்து மேலதிக விளக்கம் வேண்டுகிறேன்.இன்ஷா அல்லாஹ்.
மூன்றாம் பத்தியில் நூஹ் (அலை) என வரவேண்டும் சகோதரி கவனிக்கவும்
ஹஜருல் அஸ்வத்தை தொட அருகில் சென்று முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கியது நினைவு வருகிறது.இன்ஷா அல்லாஹ்!
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரர் குலாம்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.இது ஹஜ் ஸொசைடி வெளியிட்ட நூலில் இருந்து எடுத்து பதிந்திருக்கின்றேன்.இதற்குறிய ஹதீஸ் அறிவிப்பளர்,நூல்,எண் தெரியாது.தாங்கள் சொன்னதால் மேலும் இணையத்தில் தேடுகின்றேன்.இதற்கு ஆதாரம் உள்ளதா?இல்லையா ?என்று.தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவியமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.தொடர்ந்து உங்கள் மேலான கருத்துக்களை தொடர்ந்து பகிருங்கள்
அனுபவத்தினையும் சில வரிகளில் பகிர்ந்து விட்டீர்கள் தோழி ஆசியா.நன்றி.
//'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு சுல்தான் என்பதை நான் நன்கறிவேன்.//
யக்கா....!! ” க ல் தா ன் “
Post a Comment