மகாமு இப்றாஹீம்
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவுப்படி கஃபாவை கட்டினார்கள்.அப்போது நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் உதவியாளராக இருந்தார்கள்.நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் ஒரு சிறிய கல் மீது நின்று கட்டிடத்தைக்கட்டினார்கள்.கட்டிடம் உயர,உயர கல்லும் வளர்ந்து கொண்டே இருந்தது.
அந்த கல்லுக்கு பெயர்தான் மகாமு இப்றாஹீம்.(இப்றாஹீம் நபி நின்ற இடம்) என்று சொல்லப்படுகின்றது.அக்கல்லின் மீது இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதங்கள் இரண்டும் பதிந்துள்ளது.அவற்றை உற்று கவனித்துப் பார்த்தால் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் ஆறடிக்கும் மேல் உயரம் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிகிறது.
அப்துல் முத்தலிப் அவர்கள் தம்முடைய முதுமையில் தம்மக்களை நோக்கி தம் அருமைப்பேரர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய பாதத்தினை ஒத்திருப்பதாகவும்,அவர்களை நன்கு கவனித்து வரவேண்டும் என்றும் கூறியதாக ஒரு வரலாறு உண்டு.
இக்கல் நெடுங்காலமாக கஃபாவின் வாசலுக்கும் ருக்னுல் இராக்குக்கும் இடையில் உள்ள கஃபாவின் சுவரில் பதிக்கப்பட்டிருந்ததென்றும் நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கண்ட பொழுது இதை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி கஃபாவின் வாசலின் பக்கம் வைத்து இதன் மீது சிறு கட்டிடம் எழுப்பினர் என்றும் அவர்கள் இவ்வாறு செய்ததற்கு காரணம் மக்கள் கஃபாவை சுற்றி வரும் பொழுது இதனையும் சேர்த்து சுற்றி வருவதாக கருதி விடக்கூடாது என்பதற்காகவே என்றும் கூறப்படுகின்றது.
பிறகு உமர்(ரலி) அவர்கள் ஆட்சியில் மக்களின் நெரிசலை தவிர்க்க இது கஃபாவிற்கு சற்று கிழக்கில் தள்ளி வைக்கப்பட்டு இதன் மீது சிறு கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது தங்க முலாம் பூசப்பட்ட கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ஹாஜிகள் அனைவரும் கண்டுவரலாம்.
மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபியவர்களிடம் கூறி வந்ததற்கேற்ப இறை கட்டளை வந்தது.
"மகாமு இப்றாஹீம் என்னும் இடத்தை தொழுமிடமாக ஆக்கிக் கொள்வீர்களாக! அல் குரான்2:125
இது துஆ ஒப்புக்கொள்ளப்படுகின்ற இடமாகவும் தவாப் முடிந்ததும் இங்கே இரண்டு ரகா அத் தொழ வேண்டும்.
6 comments:
ஜஸாக்குமுல்லாஹ் க்கைர்
அருமை.தொடருங்கள்.உங்கள் பணி சிறக்க துஆக்கள்
ஓவ்வொரு முறை தவாப் முடிக்கும் பொழுது தொழுததும்,மகாமு இப்றாஹிமில் அந்த பாதங்கள் பார்த்தது இப்பவும் கண்ணிற்குள் நிற்கிறது.தோழி.
ஜெய்லானி,மர்யம்,ஆசியா உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி!
தெரிந்து கொண்டேன்.
mika arumaiyaana pakirvu
Post a Comment