Friday, July 2, 2010

ஏன் படைத்தாய் இறைவா!

மானுட ஜாதியை ஏன் படைத்தாய்
மனதினில் பொறாமையை ஏன் விதைத்தாய்

நெறியாய் வாழவும் தெரியவில்லை
நபி நேர் வழி காணவும் புரியவில்லை

தம்மின மனுஷ இதயங்களின்
உணர்வுகள் ஒன்றும் புரிவதில்லை

மனதினில் தோன்றிய கசடுகள்
எண்ணத்தில் உதித்த வக்கிரங்கள்
அத்தனையும் போட்டுடைத்து
நல்லிதயங்களை கொலை செய்யும்
கல்லிதயங்கள் ஏன் படைத்தாய்

தாந்தோன்றித்தனமாக நெறியின்றி
வாயில் வந்ததெல்லாம் பேசி
வார்த்தைகளால் விளையாடி
வஞ்சிக்கும் அவலம் இந்த
புவியார்க்கு இல்லாமல்
காத்தருள் காத்தருள் என்னிறைவா

அமைதியாய் வாழ்வதும் பிடிக்கவில்லை
எதிர்ப்பைக்காட்டவும் பிடிக்கவில்லை
இரண்டுக்கும் நடுவாய் வாழ்வதென்றால்
யாரும் துரும்பாய்.எறும்பாய் பிறக்கவில்லை.

இறுதி நபியை அனுப்பிவைத்தாய்
இகத்தை ஒளிவழி சேர்த்து வைத்தாய்
இன்னும் மனிதன் திருந்தவில்லை
மன இருளை விலக்கிட முனையவில்லை.

படித்ததில் பதிந்தவை

5 comments:

ஜெய்லானி said...

படைத்த இறைவனுக்கு தெரியும் . மற்றவர் உள்ளத்தில் உள்ளதை நமக்கு வெளிகாட்டுகிறானே..!! இதிலிருந்து நாம் பாடம் படிக்கனும் அவ்வளவே..!!

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் மீதி இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

ஸாதிகா said...

நம் அனைவருக்கும் வல்ல நாயன் அழகிய சபூரைத்தந்தருள்வானாக

ஸாதிகா said...

உங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!நன்றி சகோதரரே.