அன்னை உம்மு ஹபீபா பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவி ஆகி மதினாவில் வசித்த பொழுது அவரது தந்தை அபு சுப்யான் அவரைக்காண வந்திருந்தார்.சுப்யான் இஸ்லாத்திற்கு மாறு பட்டவர்.உம்மு ஹபீபாவின் குடிலில் ஒரு ஜமக்காளம் விரித்து இருந்ததின் மீது சுப்யான் அமர யத்தனித்த பொழுது உம்மு ஹபீபா அதனை அவசர அவசரமாக சுருட்டி வைத்து விட்டு தந்தை அமர ஒரு பாயை கொணர்ந்து போட்டார்.
இதனைக்கண்ட சுப்யான் கோபத்துடன் “மகளே,இந்த ஜமக்காளம் நான் இருக்க தகுதி அற்றதா?அல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனா?அதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்?:”என்று வினவினார்.
அதற்கு உம்மு ஹபீபா “அது பெருமானார் (ஸல்) அவர்கள் பரிசுத்த திருமேனி அமரும் விரிப்பு.ஆதலால் நிராகரிப்பாவரான அபு சுப்யான் அமர தகுதி அற்றது”என்று தன் தந்தையைப்பார்த்துக்கூறினார்.
1 comment:
அழகான நினைவு கூர்தல் ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)
நீண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு இங்கே :-)))
Post a Comment