Friday, January 13, 2012

பரகத்

ஒரு நாள் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் ரஷீத் தன் நண்பர் ஒருவருடன் உணவருந்திக்கொண்டிருந்தார்.அப்பொழுது உணவுப்பொருட்கள் சிதறி விரிப்பில் விழுந்தன.

நண்பர் சிதறிய அந்த உணவுப்பொருளை பொறுக்கி எடுத்து உண்ணலானார்.ஹாரூன் ரஷீதுக்கு இது அறுவருப்பாக தோன்றியது.நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.

எதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதை உணர்ந்த கொண்டு நண்பர் இவ்விதம் கூறினார்.”அண்ணல் நபி (ஸல்)அவர்கள் இப்படி சிதறி விழும் உணவை எடுத்து அருந்துபவருக்கு பரகத் (அபிவிருத்தி)எப்பொழுதும் இருக்கும்”என்று கூறியதை எடுத்துச்சொன்னார்.

இதனைக்கேட்ட கலீஃபா “இது எனக்கு தெரியாதே.இது வரை நான் அறிந்திருக்க வில்லையே.இதனை நீங்கள் என்னிடம் கூறியதுக்காக என் அன்புப்பரிசாக இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்”என ஒரு உயரிய மணிமாலையை பரிசளித்தார்.

அதனைப்பெற்றுக்கொண்ட நண்பர் “பார்த்தீர்களா?இப்பொழுதுதான் சிதறி விழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே பரகத் கிடைத்து விட்டது”என்றார்.அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதினை உணர்ந்து நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.

2 comments:

Asiya Omar said...

மிக நல்ல பகிர்வு.நான் சாப்பிடும் பொழுது எதுவும் சிந்தினால் எடுத்து சாப்பிடுவேன்,எங்க வீட்டிலே எல்லாருக்கும் கோபம் வரும்.இனிமே இந்த ஹதீஸை சொல்லுவேன்,தோழி.

புல்லாங்குழல் said...

சின்ன சின்ன பதிவுகளில் அருமையான பகிர்வுகள். அல்லாஹ் உங்களுக்கு ஈருலபேற்றையும் அருள் இறைஞ்சுகின்றேன்.