"இது கஃபாவுக்கு அருகில் உள்ள இரு குன்றுகளின் பெயர்களாகும்."இதைப்பற்றி அல்லாஹ் அல் குர் ஆனில்
"நிச்சயமாக ஸஃபாவும்,மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்.(2:158)என்று கூறுகின்றான்.
ஆதம் ஸஃபியுல்லாஹ்(அலை)அவர்கள் ஸஃபா மலை மீது உட்கார்ந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்தது என்றும்,ஹவ்வா (அலை) அவர்கள் மர்வா மலை மீது உட்கார்ந்ததினால் மர்வா(பெண் - மனைவி)என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.அரபிகள் இரு மலைகளிலும் அஸஃப்,நாயிலாஎன்ற சிலைகளை வைத்து தொங்கோட்டம் ஓடித் தொட்டு வந்தனர் என்றும் பின்னர் ,அரபிகள் இஸ்லாத்தை ஏற்ற பின் அச்சிலைகள் அகற்றப்பட்டன.என்றும் வரலாறு கூறுகின்றது.பின்னர் அதில் தொங்கோட்டம் ஓடுவதில் மக்கள் ஐயமுற்றபோது அல்லாஹ் அதனால் குற்றமில்லை என்று செய்தி அனுப்பினான்.
மேலும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நபி இப்றாஹீம்(அலை) ,தங்கள் மனைவி ஹாஜரா,குழந்தை இஸ்மாயீல் இருவரையும் இங்கே அல்லாஹ்வின் கட்டளைப்படி கொண்டு வந்து விட்டு சென்றனர்.மனிதர்கள் இல்லாத பாலைவனமாக இருந்த அந்த இடத்தில் குழந்தை இஸ்மாயீலை படுக்க வைத்துவிட்டு,அன்னை ஹாஜரா ஸஃபா- மர்வா மலைகளுக் கிடையே தண்ணீரைத்தேடி இங்குமங்கும் ஓடினார்கள்கள்.அன்னை ஹாஜரா(அலை)அவர்கள் ஏழுதடவை ஓடி இறைஞ்சியதால் அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் குழந்தையின் காலடியில் ஜம்ஜம் நீரைத் தந்தான்.அவர்கள் ஓடிய அந்த ஓட்டத்தை அல்லாஹ் நமக்கு ஹஜ்ஜு,மற்றும் உம்ராவின் வணக்கமாக ஆக்கித்தந்துள்ளான்.
எனவே ஹஜ்ஜோ,உம்ராவோ செய்யக்கூடியவர்கள் ஸஃபா - மர்வா இடையே ஏழு முறை தொங்கோட்டம் ஓடுவது வாஜிபாக ஆக்கப்பட்டுள்ளது.
ஹாஜிகளின் எண்ணிக்கை பல மடங்கு கூடி விட்டதால் ,ஸஃபா,மர்வாவில் போக்கு வரத்து வசதிக்காக மேலும்,கீழுமாக 4 மடங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
3 comments:
ஒவ்வொரு இடம் பார்க்கும் பொழுது ஹஜ் செய்யும் ஏக்கம் அதிகமாகிறது.ஊரில் ஹஜ்ஜிற்கு வழியனுப்பவது இப்ப மிக சங்கையாக இருக்கும்.இங்க எங்க போய் அதை எல்லாம் பார்க்க.
உம்ரா சென்றபோது சயி செய்த நினைவு வருது ,இறைவன் நாடினால் மீண்டும் போகனும்
தோழி ஆசியா உமர் ,சகோதரர் ஜெய்லானி, தங்கை ஜலி உங்அக்ள் கருத்துக்குக்களுக்கு என் அன்பு நன்றி
Post a Comment