Friday, October 1, 2010
கஃபா
கஃபா.இது மக்காவில் உள்ள இறை இல்லம்.இதன் முழுப்பெயர் "கஃபதுல்லா"ஆகும்.அரபி மொழியில் கஃபா என்றால் சதுர வடிவானது என்று பொருள்.
இதற்கு பைத்துல் ஹரம்(கண்ணியம் மிக்க வீடு - இரத்தம் சிந்துதல் நிகழக்கூடாத ,பாதுகாப்பான வீடு)என்றும் பெயர் சொல்லப்படும்.
இதனை வானம்,பூமி ஆகியவற்றை படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ் படைத்து விட்டான் என்று அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்.எனினும் அது கட்டிடமாக இல்லாமல் மணல்மேடாக இருந்தது.அதில் வானவர்கள் அமர்ந்து வணக்கம் செய்தனர்.
பிறகு ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் உலகில் இறக்கப்பட்டதும்,அல்லாஹ்வின் ஆணைப்படி அதில் கட்டிடம் கட்டினார்கள்.
ஷீது நபி (அலை) அவர்கள் இதனை சுற்றி நாண்கு புறமும் சுவர் எழுப்பினார்கள்.
அடுத்து வந்த நூஹ் நபி (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இது அழிந்தது.இருப்பினும் அடையாளமாக சிகப்பு நிற மணல் மேடு அங்கே இருந்தது.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இப்றாஹீம் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி கஃபாவை கட்டினார்கள்.
முதன் முதலில் எமன் நாட்டு மன்னர் துப்பவு அஸத் என்பவர் கஃபாவின் மீது போர்வையை போர்த்தி கவுரவித்தார்.
எல்லாகாலத்தில் மனிதர்கள் இதனை புனிதமான இறை இல்லமாகக் கருதி மரியாதை செய்தனர்.இதனைக்கண்டு பொறாமைக்கொண்ட எமன் நாட்டு மன்னன் அப்ரஹா என்பவன் கி.பி 570 ஆம் ஆண்டு தன் யானைப்படையோடு வந்து இதனை அழிக்க வந்தான்.ஆனால் அல்லாஹ் சிறு பறவைகளின் வாயில் கற்களை வைத்து வீசி அப்படைகளை அழித்துவிட்டான்.
எல்லா நபிமார்களும்,இங்கே வந்து அல்லாஹ்வை தொழுது இருக்கின்றார்கள்.ஹஜ் செய்து இருக்கின்றார்கள்.முஹம்மது நபி (ஸல்)அவர்களும் இங்கு தொழுதார்கள்.
கி.பி 631- இல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டு இது முற்றிலும் முஸ்லிம்கள் வசம் வந்தது.சுமார் 1400 ஆண்டுகளாக தொடர்ந்து உலக முஸ்லிம்கள் யாவரும் ஹஜ்ஜு செய்யும் இடமாக இருந்து வருகின்றது.கஃபாவை சுற்றியுள்ள பகுதிகளை பல மன்னர்கள் விரிவு படுத்தி உள்ளார்கள்.கடைசியாக ஹிஜ்ரி 1040 -இல் துருக்கி ஆட்சியின் பொழுது ரிஸ்வான் ஆகா என்ற பொறியாளர் மற்றும் இந்திய கட்டிடகலை நிபுணர் மஹ்மூது ஆகியோரால் கட்டப்பட்டது.இப்பொழுது சவுதி அரசால் மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டு சுமார் 10 லட்சம் மக்கள் தொழும் பிருமாண்டமான மஸ்ஜித் ஆக அமைந்துள்ளது.
கருங்கல்லால் கட்டப்பட்ட கஃபாவின் உயரம் சுமார் 50 அடி,நீளம் 40 அடி,அகலம் 25 அடியாகும்.இதற்கு நாண்கு மூலைகள் உள்ளன.ருக்னுல் அஸ்வத்,ருக்னுல் யமானி,ருக்னுல் ஷாமி,ருக்னுல் இராக்கி ஆகியவையாகும்.இதனைச்சூழ 96 வாசல்கள் உள்ளன.9 மினாராக்கள் உள்ளன.எந்த நேரமும் எல்லா வாசல்களும் திறந்தே இருக்கும்.உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த கஃபாவை நோக்கியே தொழுகின்றனர்.
நன்றி:
தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொஸைட்டி
Labels:
புனிதத் தலங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிக்கா, மாஷா அல்லாஹ் பதிவு ரொம்ப அருமை. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ். மேலும் உங்கள் BLOG மிகவும் அருமை. நான் ஒரே ஒரு பதிவு post பண்ணேன். பின்பு பொறுமை இல்லை இன்னும் எழுத ஆசையாக உள்ளது. இன்ஷா அல்லாஹ் எழுதணும். என் BLOG யையும் பார்க்கவும். only 1 post. my blog is nivashahblog.blogspot.com
மாஷா அல்லாஹ்..!!
அல் ஹம்துலில்லாஹ்..!!
அல்லாஹு அக்பர்...!!!
வ அலைக்கும் வஸ்சலாம்.கருத்துக்கு மிக்க நன்ரி.உங்கள் பிளாக் சென்று பார்த்து பின்னூட்டமும் இட்டு விட்டேன்.பொறுமையாக நிரைய எழுதுங்கள் .வாழ்த்துக்கள்!
//மாஷா அல்லாஹ்..!!
அல் ஹம்துலில்லாஹ்..!!
அல்லாஹு அக்பர்...!!// ஆஹா...அருமையான பின்னூட்டம் ஜெய்லானி.நன்றி!
காணக்கண் கோடி வேண்டும் கஃபாவை.பகிர்வும் அருமை.
அருமை. இதுவரை தெரியாத பல விசயங்களை அறிந்து கொண்டேன். திரளான மக்கள்..... கண் கொள்ளா காட்சிகள்......படங்கள் நல்லா இருக்கு.....
//எந்த நேரமும் எல்லா வாசல்களும் திறந்தே இருக்கும்.//
ஆண்டவரின் உள்ளமும் அப்படிதானே....!!
பகிர்வுக்கு நன்றி தோழி
//காணக்கண் கோடி வேண்டும் கஃபாவை.// சத்தியமான உண்மை தோழி ஆசியா.நன்றி!
ஸ்நேகிதி கவுசல்யா,உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி . //திரளான மக்கள்..... கண் கொள்ளா காட்சிகள்......//ஆம்,சரியாக சொன்னீர்கள்
கஃபாவை பார்த்ததும், மறுபடி எப்ப போவோமுன்னு இருக்கு, தகவலுக்கு மிக்க நன்றி.
வல்ல நாம் அனைவரையும் விரைவில் சென்று வர கிருபை செய்வானாக !ஆமீன்!நன்றி தங்கை ஜலி.
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment