Tuesday, September 28, 2010

ராபியத்துல் பஸ்ரியா துஆ கேட்ட விதம்.


"எனது இறைவா!இம்மையில் நீ எனக்கு அளிக்க விரும்பும் கருணைகளை நீ உன் நேசர்களுக்கு வழங்குவாயாக!
எனக்கு நீயே போதுமானவன்.இறைவா!இம்மையிலும்,மறுமையிலும் அனைத்துக்கும் மேலாக நான் உன்னையே நேசிக்க விரும்புகின்றேன்.மற்றயாவும் விடுத்து உன்னையே சந்திக்க விரும்புகின்றேன்.
இறைவா!நான் நரகவேதனை விட்டும் நீங்குவதற்காக நான் உன்னை வணங்கினேயானால் என் தங்கும் இடம் நரகமாகட்டும்.நான் மரித்தபின் என்னை நரகத்தில் விட்டு அந்த நரகம் முழுதும் நிரம்பும் படியாக என் உடம்பை பெரிதாக்கி மற்ற எவரையும் நரகில் போட இயலாதாவாறு ஆக்குவாயாக!
இறைவா!சுவர்க்கத்தின் இன்பத்தினை அடையும் பொருட்டு நான் வணங்கினேயானால் எனக்கு அந்த சுவர்க்க வாசல் அடைபடட்டும்.
இறைவா!உன்னையே அடைய நான் வணங்கினேயானால் உனது அழிவற்ற தரிசனத்தை விட்டும் என்னை விட்டுவிடாதே"

சுப்ஹானல்லாஹ்.வரலாறு போற்றும் அந்த பக்திமான் ,உயர்ந்த பெண்மணி இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் கூட சுக வாழ்வை நாடாமல் அவர்கள் இறைவனை அடையும் அவாவை எண்ணும் பொழுது நம் கல்பு சிலிர்க்கின்றது.

11 comments:

Unknown said...

ஜசகல்லாஹு கைரன்.ராபியத்துல் பஸ்ரியா துஆ கேட்ட விதம் சிலிர்க்க வைக்கின்றது.

அன்புடன்
மர்யம் ஹஃப்ஷா

ஜெய்லானி said...

ஜஸாக்கல்லாஹ் க்கைர்....!!



ஆனால் சுவர்கத்தை கேட்டும் , நரகத்தை விட்டும் துவா கேட்குமாறு குரான் , ஹதிஸ் இருக்கு. அதனால் யாரும் இப்படி கேட்க மனதால் கூட நினைக்க வேண்டாம்.

(( எந்த துவா ஏற்றுக்கொள்ள கூடும் எந்த துவா நிராகரிக்ககூடும்.. அல்லாஹ்வே நன்கு அறிவான் ))

ஸாதிகா said...

நன்றி மர்யம் ஹஃப்ஷா தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

ஸாதிகா said...

//ஆனால் சுவர்கத்தை கேட்டும் , நரகத்தை விட்டும் துவா கேட்குமாறு குரான் , ஹதிஸ் இருக்கு. அதனால் யாரும் இப்படி கேட்க மனதால் கூட நினைக்க வேண்டாம்.
//உண்மைதான் ஜெய்லானி.ஆனால் நான் படித்த வரலாறுகளில் ராபியத்துல் அதவியாவின் வரலாறு என்னை ஆச்சரியப்படவைத்தது.எந்த மனிதரும் இவ்வண்ணம் இறைவனிடம் கேட்டு இருக்கமாட்டார்கள்.அதேபோல் பிரம்மச்சாரியம் என்பதும் இஸ்லாத்தில் இல்லை.ஆனால் இந்த பெண்மணி திருமண வாழ்க்கையினால் இறைவனுக்கும் தனக்குமுண்டான நெருக்கம் குறைந்து விடும் என்று இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர்

Asiya Omar said...

பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

நன்றி ஆசியா.

nivashah said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஸாதிகா, என்னதான் இருந்தாலும் துறவறம் இஸ்லாத்தில் இல்லை. என்னதான் அல்லாஹ் மீது அளப்பரிய ஈமான் கொண்டு இருந்தாலும் துறவறம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அல்ல. துவா கேட்கும் முறையில் தான் கேட்க வேண்டும்.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் nivvvashah.தங்கள் கூற்று உண்மையே!எனது கருத்தும் அதுவே.அவரைப்போல் உங்களினாலோ என்னாலோ,மற்ற யாரினாலும் இப்படி பிரார்த்தனை செய்ய முடியாது.வரலாற்றில் இந்த வித்தியாசமான பெண்மணியின் இறை நேசத்தினை பதியபெற்று இருந்ததை பகிர்ந்து கொண்டேன்.கருத்துக்கு நன்றி!

Jaleela Kamal said...

ராபியத்துல் பச்ஸிரியாவின் துஆவையும் , அவர்கள் கேட்ட விதம் மிக மெய் சில்ர்க்க வைக்கிறது.

ஸாதிகா said...

உண்மைதான் ஜலி.இவரின் வரலாறை படித்துவிட்டு வியப்பில் ஆழ்ந்து போனேன்

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/