Wednesday, July 7, 2010
சிரிப்பு எத்தனை வகை
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்
மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்
விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை
அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை
காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி
நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்
அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
படித்ததில் பதிந்தவை
Labels:
அறிந்து கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ரொம்ப நாளைக்கு முன்பு எங்கோ படித்ததாக நினைவு!! ஆனாலும் இதை இங்கே எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் மேடம்!!
தொடர் ஊக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி!//படித்ததில் பதிந்தவை// பதிவுக்கு கீழுள்ள மேற்கண்ட வரிகளை வரிகளை கவனிக்கவில்லையா?
நல்ல பகிர்வு
நன்றி சகோதரர் ஜெய்லானி
சிரிப்புக்கள் நன்றாக இருக்கு ஸாதிகா அக்கா.
நன்றி அதிரா கருத்துக்கும்,முதல் வருகைக்கும்.
nalla pathivu....
Post a Comment