Wednesday, July 28, 2010

மஹர்


‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)

‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236)

‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)

ஒரு தடவை நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஒரு இளைஞர் "நான் மணம் செய்யப்போகின்றேன்.ஆனால் என்னிடம் மஹராக கொடுக்க எதுவுமே இல்லை.நான் அணிந்திருக்கும் இந்த ஒரே ஒரு வேட்டியத்தவிர.அதனால் இந்த வேட்டியை கிழித்து ஒரு பகுதியை என் மனைவிக்கு மஹராக கொடுக்கவா" என்றார்.

இதனைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் "வேண்டாம் கிழித்தீர்களானால் இருவருமே உபயோகிக்கமுடியாததாகி விடும்.நான் ஒன்று சொல்கின்றேன்.உமக்கு குர் ஆன் ஷரீபில் எந்த சூராவாவது மனனம் செய்துவைத்திருக்கின்றீரா?"என்று கேட்டதும் அவ்விளைஞர் "ஆம்" என்றார்.

உடனே நபி (ஸல்)அவர்கள் "சரி நீர் மனனம் செய்த சூராக்களை உமது மனைவிக்கும் கற்றுக்கொடும்.நீர்கற்றுக்கொடுத்து, கற்றுக்கொடுத்ததை மஹராக்கிக்கொள்ளும் "என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.

ஆதித்தந்தை ஆதம்(அலை)அவர்கள் அளித்த மஹர்:

ஆதம் அலை அவர்களில் இருந்தே ஹவ்வா அலை அவர்களை சிருஷ்டித்த இறைவன் அமரர்கள் (வானவர்கள்) சாட்சியாக ஆதம்(அலை) அவர்களுக்கும்,ஹவ்வா (அலை )அவர்களுக்கும் மணம் செய்துவைத்தான்.அவ்விழாவில் திருமணப்பேருரை நிகழ்த்தியதும் இறைவனே.மணம் முடித்த பின் ஆதம் (அலை) அவர்கள் தன் மனைவியின் அருகே நெருங்கிய பொழுது அமரர்கள் அவர்களை தடுத்து விட்டனர்.மனைவிக்கான மஹரை கொடுக்காதவரை மனைவியை நெருங்க கூடாது என்ற இறைக்கட்டளையை நினைவூட்டீனர்.

"மஹர் என்றால் என்ன?" என்று வினவியபொழுது

"திருமணத்தின் போது கணவன் மனைவிக்கு கொடுக்கக்கூடிய தொகை"என்று வானவர்கள் விளக்கம் பகர்ந்தனர்.

"அவ்வாராயின் நான் என் மனைவிக்கு என்ன கொடுக்கவேண்டும்"என்று வினவினர் ஆதம் அலை அவர்கள்.

"உமது வழிவழிப்பேரராகிய முஹம்மது(ஸல்)அவர்கள் மீது மும்முறை ஸலவாத்து சொல்லும்"என்று வானவர்கள் கூறினர்.

அதன் படியே நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லி,அதனையே தன் மனைவிக்கு மஹராக கொடுத்தனர் ஆதித்தந்தை அவர்கள்

7 comments:

ஜெய்லானி said...

உதா: இப்ப வரதட்சனை ஒரு லட்சம்.. மஹர் ஐந்தாயிரமுன்னு ஆகிப்போச்சி. மஹர் எதுக்குன்னே தெரியாம போன இந்த காலத்தில மஹரை பத்தி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்..

எம் அப்துல் காதர் said...

அருமையான பதிவு சகோதரி!! வாழ்த்துகள்...!

ஸாதிகா said...

உண்மைதான் சகோதரர் ஜெய்லானி.//இப்ப வரதட்சனை ஒரு லட்சம்.. மஹர் ஐந்தாயிரமுன்னு ஆகிப்போச்சி. //வரதட்சணை வாங்கிக்கொண்டே மஹர் கொடுக்கும் மடையர்களும் நம்மில் இருக்கின்றார்கள்.இவர்களின் அறிவீனத்தை என்னென சொல்வது?எனக்கும் சரி,என் சகோதரிகளுக்கும் மஹர் மட்டும் பெற்றே மணம் முடித்தோம்.அதே போல் என் பிள்ளைகளுக்கும் நடக்க இறைவன் கிருபைசெய்வானாக!

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் அப்துல்காதர்.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் அப்துல்காதர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு ஸாதிகாக்கா.. இன்னும் தொடருங்கள்.. தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் ஸ்டார்ஜன்.