Saturday, July 24, 2010

அறம் என்னும் அற்புதம்


புரவி மீது இவர்ந்து வந்து யாசிப்போருக்கும் தானம் அளியுங்கள்.
அ:அதிபிப்னு ஹாதிம்
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ

தம்முடைய அவசியத்தேவைகளில் இருந்து மீதமுள்ளதை தர்மம் செய்வதும்,தன் குடும்பத்தாரில் இருந்து தர்மம் செய்யத்துவங்குவதும் மேலான தர்மம் ஆகும்.
அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,அபூதாவுத்,நஸாயீ

தர்மம் செய்தவர் தன் செய்த தர்மத்தை திரும்ப பெறுவாராயின் வாந்தி எடுத்ததை மீண்டும் உண்பதற்கு நிகராவார்.
அ:உமர் (ரலி)
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ,முஅத்தா,திர்மிதி

அறம் செய்தல் இறைவனது சினத்தை தணிய வைத்து தீய இறப்பை விட்டும் மனிதனை காக்கின்றது.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

"ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட ஒரே ஒரு பொன் நாணயம் உயர்வானதாகி விட்டது"நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொழுது "நாயகமே!அது எங்ஙனம் "என்று வினவப்பட்டது.

"ஒரு மனிதரிடம் இரண்டே பொன் நாணயங்கள் இருந்தன.அவற்றில் இருந்து நல்லவற்றை தேர்ந்தெடுத்து தானம் செய்து விட்டார்.மற்றொரு செல்வந்தர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு லட்சம் பொன் நாணயங்களை எடுத்து தானம் செய்து விட்டார்.முந்தியவர் தானம் செய்த நல்ல ஒரு பொன் நாணயம் ,பிந்தியவருடைய ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட சிறந்ததாகி விட்டது.ஏனெனில் முன்னவர் தன் பொருளில் இருந்து பாதியில் நல்லவற்றை அளித்தார்.பின்னவர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு சிறு பாகத்தினை அளித்தார்"என மறு மொழி பகர்ந்தார்கள்.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

5 comments:

Asiya Omar said...

தோழி ஸாதிகா நலமா?

தர்மம் செய்தவர் தான் செய்த தர்மத்தை திரும்ப பெறுவாராயின் வாந்தி எடுத்ததை மீண்டும் உண்பதற்கு நிகராவார்.

-ஒரு சிலருக்கு இது தெரிவதில்லை.

ஜெய்லானி said...

தர்மத்தை சொல்லும் நல்ல பதிவு

ஜெய்லானி said...

நபிகள் நாயகம் சொல்கிறார்கள்--"நீர் ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலோ, வறுமை வந்து விடும் என்று பயப்படும் காலத்திலோ, இன்னும் அதிக செல்வம் சேரும் என்று எதிர்பார்க்கும் நேரத்திலோ தர்மம் செய்து விட வேண்டும். அதுவே, தர்மத்தில் எல்லாம் தலைசிறந்ததாகும். அதே நேரம், உமது உயிர் தொண்டைக்குழிக்கு வந்து நீர் இறக்கத் துவங்கும் போது, தர்மம் செய்ய ஆரம்பிப்பதில் பலனில்லை. அதனால் என்னபலன் உண்டாக போகிறது? அந்த செல்வம் தான் தானாகவே இன்னொருவரைப் போய் அடைந்து விடுமே!''

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜகாத்தை அருமையாக சொல்லிருக்கீங்க ஸாதிகா அக்கா.. இதை கடைபிடித்தால் ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்காது இல்லையா..

ஸாதிகா said...

தோழி ஆசியா,சகோதரர்கள் ஜெய்லானி,ஸ்டார்ஜன் உங்களனைவரது கருத்துக்களுக்கும் நன்றி!