Wednesday, July 7, 2010

அறத்தின் மகத்துவம்


பிர்அவுனைபற்றி குர் ஆனிலும்,ஹதீஸ்களிலும்,வரலாறுகளிலும் நிறைய அறிந்திருப்போம்.
பிர்அவுன் - மூஸா (அலை) அவர்களுக்கு வழிப்படாமல்,தன்னையே இறைவன் என்று கூறிய கொடியவன்.இறைவனுக்கு முற்றிலும் மாறுபட்டவன்."அல்லாஹ் ஒருவனே" என்று அந்த அர்ஷுக்குரியவனை வழிப்பட்ட மூஸா (அலை)அவர்களை பின்பற்றிய மக்களை துன்புறுத்தி கொடுமை செய்தவன்.அவனது சொல்லொண்ணா தொல்லைகளை கண்ட மூஸா (அலை)அவர்கள் இறைவனிடன் பிர் அவுனை அழித்து விடுமாறு மன்றாட்டம் செய்தார்கள்.

இறைத்தூதர்களான நபிமார்களின் பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும் அல்லாஹ்விடத்தில்.அப்படி இருந்தும் பிர் அவுன் அழிக்கப்படாமல் மூஸா(அலை) அவர்களின் து ஆ கபூல் செய்யப்படாமல் இருந்து வந்தது.தொடர்ந்து பிர் அவுனின் தொல்லைகள் அதிகரிக்கத்தான் செய்தது.

இதனைக்கண்ட நபியவர்கள்"இறைவா!நபிமார்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றுவதாக வாக்களித்து இருந்தாயே!ஆனால் பிர் அவுன் அழிக்கப்படாமல் இருக்கின்றானே?"என இறைவனிடம் வினவினார்கள்.

அதற்கு வல்ல இறைவன்"ஓ..மூஸாவே..நான் அவ்விதம் வாக்களித்திருப்பது உண்மைதான்.பிர் அவுன் இத்தனை அநியாயக்காரனாக இருந்தாலும் ஒரு சில நற்கிரியைகள் செய்து வருகின்றான்.அதனால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்"என்றுரைத்தான்.

"பிர் அவுன் இடத்திலுமா நற்கிரியைகள் நிகழ்கின்றன?" மூஸா (அலை)அவர்கள் திகைப்புடன் வினவ

"ஓ..மூஸாவே!அவன் அரசாட்சியில் ஏழைகளுக்கு மடங்கள் கட்டி உள்ளான்.அவனது ஆட்சியில் பசித்தோருக்கு அன்னதானம் வழங்கி உள்ளான்.வறியோர்கள் வயிறார உண்ட பின் அவனை அகம் குளிர வாழ்த்திவிட்டுஅவனுக்காக என்னிடம் பிரார்தனை செய்கின்றனர்"என இறைவன் கூறினான்.

பிர் அவுன் இந்த தர்மங்களை மக்கள் தன்னை ஏற்றிப்போற்றி,புகழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே செய்து வந்தான்.இருப்பினும் அவனது இந்த தர்ம செயல்களால் ஏழை எளியவர்கள் நிறைவு பெறுகின்றனர் என்ற ஒரே காரணத்தினால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்.

பிர் அவுன் எப்படிப்பட்ட கொடூரன்.இருப்பினும் அவன் செய்த தர்மம் ,தர்மத்தின் தலைவனான அல்லாஹ்வையே அவன் மீது நோக்கச் செய்து விட்டது
என்றால் அந்த தர்மத்தின் மகத்துவம்,சக்தியை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

பிர் அவுன் தர்மச்செயல் புரிந்ததால் இறைவனின் அன்பை எட்டி விட இயலாதுதான்.பிர் அவுன் எப்பொழுது தானே இறைவன் என்று மமதை கொண்டு ஆடினானோ அக்கணமே இறைவனால் சபிக்கப்பட்டவன் ஆகிவிட்டான்.என்றாலும் தர்மத்தின் தன்மையானது இறைவனை மிகவுமே கவர்ந்து விடுகின்றது என்ற காரணத்தினாலேயேதான் பிர் அவுன் அழிவை விட்டும் சிறிது தாமதபடுத்தபட்டான்

தர்மத்தின் சக்தி எத்தனை வல்லமையானது.அல்ஹம்துலில்லாஹ்!

4 comments:

ஜெய்லானி said...

அருமையான விஷயம் ...மாஷா அல்லாஹ்

எம் அப்துல் காதர் said...

//தர்மத்தின் சக்தி எத்தனை வல்லமையானது.//

உண்மை தான் மேடம்! அல்ஹம்துலில்லாஹ்! நிறைய எழுதுகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி,, நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க!

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் ஜெய்லானி.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோதரர் அப்துல்காதர்.// நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க// வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சி.அத்துடன் என் தக்வாவும்,இஃலாஸும் இன்னும்,இன்னும் அதிகரிக்க து ஆ செய்யுங்கள்