Monday, July 5, 2010
ஜின்
குல் ஊஹிய இல்லாஹ் இன்னஹுஸ்தமஹ நப்ருன் மினல் ஜின்னி பகாலு இன்னா ஸமிஹ்னா குர் ஆனன் அஜப்!
(நபியே நீர் கூறுவீராக !எனக்கு வஹி அறிவிக்கப்பட்டது."நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் இந்த குர் ஆனை செவியுற்றனர்;பிறகு தம் கூட்டாத்தாரிடம் சென்று நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு குர் ஆனை செவியுற்றோம்"என்று கூறினர்.
அல்குர் ஆன்- அ-72:வ1
ஜின்கள் என்றால் யார்?
ஜின்கள் என்றால் மனிதர்கள் போன்ற உடல் அமைப்பும்,தோற்றமும்,குடும்பம் கோத்திரம் என்று வாழும் ஒரு இனமாகும்.இவற்றின் தனிச்சிறப்பு மனிதர்களின் கண்களை விட்டும் மறைந்து வாழும் சக்தியுடையவை.இதனால் இவ்வினத்திற்கு ஜின் என்று பெயரிடப்பட்டது.ஜின் என்பதற்கு கண்ணுக்கு அப்பால் மறைந்திருப்பவை என்று பொருளாகும்.
ஷைத்தான்களுக்கும் ஜின் என்றே கூறப்படுகின்றது.ஆயினும் ஷைத்தான் பொது வார்த்தை அல்ல.ஜின்களிலேயே துஷ்டத்தனம் கொண்டவைகளையே ஷைத்தான் எனப்படுகின்றது.ஜின்களின் படைப்பின் அடிப்படை நெருப்பாகும்.மேலும் அவை விண்ணில் சஞ்சாரம் செய்யும் ஆற்றல் பெற்றவை.
ஜின் இனத்தினர் நபி (ஸல்)அவர்கள் பிறப்புக்கு முன் விண்ணில் சஞ்சரித்து,வானவர்கள் தங்களுக்குள்ளே இறைத்திட்டங்கள் குறித்து பேசுவதை மறைந்திருந்து திருட்டுத்தனமாக கேட்டு வருவது வழக்கம்.குறிப்பாக நபி (ஸல்)அவர்களின் பிறப்புக்கு பின் அவர்களது நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வானவர்களால் தடுக்கப்பட்டு விட்டது.எனவே பூமியில் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து இருக்க வேண்டும்மென்று யூகித்துக் கொண்ட ஜின்கள் ,அதனைக்கண்டறிய பூமியின் பல பாகங்களுக்கும் குழுக்களை அனுப்பினர்.
அப்பொழுதுதான் ஒரு குழு நபி (ஸல்) அவர்களைன் குர் ஆன் ஓதுதலைக்கேட்டு தாமும் இஸ்லாத்தை ஏற்று ,பிறரிடமும் அதனை சொல்லி விளக்கின.அப்போதே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு ஜின்கள் குர் ஆன் ஓதுவதைப் பற்றி வஹி அறிவித்து மேற்கண்ட வசனத்தை அருளினான்.
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
ஜின் இனத்தை அடக்குகின்ற பொறுப்பை அல்லாஹ் மலக்குகளிடமே ஒப்படைத்து இருந்தான்.ஆகவே 'மனித இனத்தை அடக்குகின்ற பொறுப்பும் நம்மிடத்திலேதான் வரும்' என்று மலக்குகள் எண்ணினர்.மனிதர்களை சரி செய்ய மனிதர்களே போதும் என்பதினை கீழ்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் அருளினான்.
அதற்கு வானவர்கள்"நீ தூய்மையானவன்.நீ எங்களுக்கு கற்றுகொடுத்ததை அன்றிவேறு எங்களுக்கு இல்லை.வேறு எதனையும் நாங்கள் அறிய மாட்டோம்.திண்ணமாக நீயே அறிவு மிக்கவன்,ஞானம் நிறைந்தவன்" என்று கூறினர்.
அத்:2-வச:32
மனித ஆற்றலின் வலிமையை"மலக்குகளின் கல்வி,அறிவு,ஞானம்,ஒரு வரையயறைக்கு உட்பட்டது.ஆனால் மனிதனின் அறிவாற்றல் அப்படிப்பட்டதல்ல.பூமியில் இருந்தவாறே பிறகிரகங்களையும்,அதன் இயக்கங்களையும் அறிகின்றான்.மனிதனின் அறிவு ,ஆற்றல்,மற்ற படைப்பினங்களை விட அதிகம் என்பதினையும்,மலக்குகள்,ஜின்களிடம் இல்லாத முழுமையான ஆற்றலைத் தரப்பட்ட மனித இனமே உலகில் எனக்கு பிரதிநிதியாக இயங்கத் தகுதியானது"என்று அல்லாஹ் மலக்குகளிடம் விளக்கி உள்ளான்.
சகப்பதிவர் ஒருவர் நிஜமாக சொன்னாரா அல்லது அப்படியல்லாமல் சொன்னாரா என்பது தெரிய வில்லை.தான் தினமும் ஜின்னை பார்ப்பதாக,தஹஜ்ஜத் வேளைகளில் குர் ஆன் ஓதும் சப்தமும்,பேச்சு சப்தமும் கேட்டு பக்கத்தில்போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது.அது ஜின் தான் என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன் செல் போன் மூலம் பறிமாறப்பட்ட ஒரு வீடியோ காட்சி அது .அது புனைப் படுத்தியதாக இருந்தாலும் எப்படி என்னுள் திகிலை ஏற்படுத்தியதோ ,அதே போல் சக பதிவரின் ஜின் பற்றிய உரையாடலும் எனக்கு திகிலை ஏற்படுத்தி விட்டது.குர் ஆனை விரிவாக அலசிய போது நான் அறிந்தவற்றை பகிர்ந்திருகின்றேன்.உங்கள் அபிப்ப்ராயத்தை பின்னூட்டம் வழியாக கூறுங்கள்.
ஜின் தொழும் ,என்னை திகில் எற்படுத்திய அந்த வீடியோ காட்சி இதோ
Labels:
ஜின்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வீடியோவை பார்த்துட்டு அடுத்த கமெண்ட்....
ஜின்களின் உலகம் வேறு மனிதனின் உலகம் வேறு .அது இருப்பது உண்மைதான். அல்லாஹ் யாருக்கு நடுகிறானே அவனுக்கு தன் படைப்பினங்களின் ஞானத்தை அளிக்கிறான். அம் மனிதனின் தக்வாவை சோதிப்பதற்காக இருக்கலாம்.
நானும் பார்த்தேன் சில மாதங்களுக்கு முன்னர் அந்த வீடியோ ஒரு பள்ளியில் தொழும் முசல்லா திடிரென்று தானே எழுந்து நின்றதாக வந்தது . உண்மையா தெரியாது.
/// அல்லாஹ் யாருக்கு நாடுகிறானே அவனுக்கு தன் படைப்பினங்களின் ஞானத்தை அளிக்கிறான். அம் மனிதனின் தக்வாவை சோதிப்பதற்காக இருக்கலாம்///..உண்மையாகவா?
இந்த வீடியோ படக்காட்சி மிகப்பழையது.அப்பொழுது செல்போன்களில் பறிமாற்றம் செய்யப்பட்டு பிரபலமாக் இருந்தது.அந்த படக்காட்சியைப்பார்த்த சில நாட்களாக எனக்கு திகில்தான்.
Post a Comment