Sunday, July 4, 2010
நிறைந்திடும் நெஞ்சம்
நபிகள் நாயகம் அவதரித்தார்
இந்த அகிலம் முழுதும் ஆதரித்தார்
வேண்டிய வாழ்வு நமக்களிக்க
ஏகன் இறையை வேண்டிடுவார்
துன்பங்கள் நீங்கி சுகம் அளிக்க
துயரங்கள் இல்லா வாழ்வாங்க
நிம்மதியான நெஞ்சம் பெற
தூய இறையிடம் பரிந்துரைப்பார்
இறைவனை என்றும் நினைவு கொள்வோம்
இறைத்தூதரின் சொற்படி வழி நடப்போம்
இறைவனைத்தொழுதே துதித்திடுவோம்
இறை அச்சமுடன் நாம் வாழ்ந்திடுவோம்
எரியும் பகையினை அணைத்திடவே
அவன் பால் உலகை உயர்த்திடவே
தகிக்கும் பொறாமை தணிந்திடவே
வெறுக்கும் அவாவை ஒழித்திடவே
மனதினில் நாமே உறுதிகொள்வோம்
தொண்டால் நாமும் நிலைத்திடுவோம்
கற்றதன் பலனை கண்டிடுவோம்
இறைநபி வழியில் சென்றிடுவோம்
அத்தனை நலமும் நாம் பெறுவோம்
நம் நெஞ்சங்கள் நிறைந்திடும் இறை நினைவில்
Labels:
முஹம்மது(ஸல்)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சல்லல்லாஹு ஆலா முஹம்மத்
சல்லலாஹு அலைஹி வசல்லம்
நன்றி சகோதரரே!
ஸ்ல்லல்லாஹூ அலாமுஹம்மத்
ஸ்ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்.
//நிறைந்திடும் நெஞ்சம்//
மனமெல்லாம் நிறைந்து விட்டது சகோதரி. நன்றி!
மிகவும் நன்றி சகோதரர் ஸ்டார்ஜன், அப்துல் காதர்
Post a Comment