Sunday, June 13, 2010
(12) ஸல் - ரலி - ரஹ் - அலை
ஸல் - ரலி - ரஹ் - அலை
ஸல் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
நாயகத்தின் திரு நாமத்திற்குப்பின்னால் புகழப்படுபவை.
பொருள்:நாயகம் அவர்கள் மீது அல்லாஹ் ஸலாவத்து சொல்வானாக!
ரலி - ரலியல்லாஹு அன்ஹு.
ஸஹாபாக்களின் பெயருக்குப்பின்னால் கூறப்படவேண்டும்.
பொருள்:அல்லாஹ் அவர்களிப்பொருந்திக்கொண்டான்.
ஒரு பெண் சஹாபி பெயருக்குப்பின் ரலியல்லாஹு அன்ஹா என்று கூறவேண்டும்
இரு ஆண்,பெண் ஸஹா(பி)பா பெயருக்குப்பின்னால் ரலியல்லாஹு அன்ஹுமா என்று கூறவேண்டும்.
இரண்டு ஸஹாபாக்கள் பெயருக்கு பின் ரலியல்லாஹு அன்ஹுன் என்று கூற வேண்டும்.
இரண்டுக்கும் அதிகமான பெண் சஹாபியாக்கள் பெயருக்குப்பின் ரலியல்லாஹு அன்ஹுன்ன என்று கூற வேண்டும்.
ரஹ் - ரஹ்மத்துல்லாஹி அலைஹி
இமாம்கள்,வலிமார்கள்,தாபியீன்கள்,அல்லாஹ்வின் நல்லடியார்கள்,பெயருக்குப்பின் கூறப்படுபவை.
மேற்கண்டவர்களின் பெண்களின் பெயருக்குப்பின் ரஹ்மத்துல்லாஹி அலைஹா என்று கூற வேண்டும்.
மேற்கண்டவர்களின் இரண்டு ஆண்,பெண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹிமா என்று கூற வேண்டும்.
இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹிம்
இரண்டுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹின்ன
இவ் உலகத்தை விட்டு மறைந்த இக்கால மார்க்க பெரியார்களை (ரஹ்) என்று கூறலாம்.
அலைஹி - அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
நபியின் பெயருக்குபின் கூறப்படவேண்டும்.
பொருள்:அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக
இரண்டு நபிமார்கள் பெயருக்குப்பின் அலைஹி மஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறவேண்டும்.
இரண்டு நபி மார்களுக்கும் அதிகமானோர் பெயர்களுக்குப்பின் அலைஹி முஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூற வேண்டும்.
ஆதாரம்:பிக்ஹின்
Labels:
அறிந்து கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி
ஜஸாக்குமுலாஹ் க்கைர்
சகோதரர்கள் ஸ்டார்ஜன்,ஜெய்லானி மிக்க நன்றி.அல்ஹம்துலில்லாஹ்.
(ஆதாரம்:பிக்ஹின்) சகோதரி இந்த நூல் யாரால் இயற்ற பற்றது,இந்த நூல் பெயர் நான் முதன் முதலில் கேள்வி படுகின்றேன் ,விளக்கம் தரவும்.
சகோதரி ஒப்புகொள்ள பட்ட மதஹபுகள் என்று முந்திய இடுக்கையில் கூறியுள்ளீர்கள். யாருடைய காலத்தில் மதஹபுகள் அனுமதிக்கப்பட்டது, நீங்கள் ஆதாரமாக சொல்லும், அந்த நூல் அனுமதிக்க பட்ட நூலா ப்ளீஸ் விளக்கம் தரவும்.
இடையூறுக்கு மன்னிக்கவும், மார்க்க விஷயம் என்பதால் தான் கேட்கின்றேன் சகோதரி.
நல்ல தகவல்களை அறியத்தருகிறீகள் அக்கா. க்கைர்
சகோதரர் இளம் தூயவன்,நான் பிக்ஹின் அறிவுக்களஞ்சியம் என்ற நூலில் படித்ததை பல வருடங்களுக்கு முன்னர் குறிப்பெழுதி வைத்து இருந்ததை அப்படியே பதிவு செய்தேன்.அது யாரால இயற்றப்பட்டது என்பதினை இன்ஷாஅல்லாஹ் பிறகு அறியத்தருகின்றேன்.இயற்றப்பட்டவரை நான் குறிப்பில் பதிவு செய்யவில்லை.
//சகோதரி ஒப்புகொள்ள பட்ட மதஹபுகள் என்று முந்திய இடுக்கையில் கூறியுள்ளீர்கள். யாருடைய காலத்தில் மதஹபுகள் அனுமதிக்கப்பட்டது, நீங்கள் ஆதாரமாக சொல்லும், அந்த நூல் அனுமதிக்க பட்ட நூலா ப்ளீஸ் விளக்கம் தரவும்.//பெருமானார் (ஸல்)அவர்கள் காலத்திற்குப்பின்னர்தான் மதஹபுகள் அனுமதிக்கப்பட்டது என்று நூற்கள் மூலம் நான் அறிந்தவை.அலசி ஆராய்ந்து லட்சகணக்காண ஹதீஸ்களை திரட்டி ஆதாரப்பூர்வமானவை என்றுசில ஆயிரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களையே சமீபகாலத்தில் அவரவர் வசதிக்கேற்ப இது ஆதாரப்பூரவமில்லாத ஹதீஸ் என்று ஒதுக்கி விடுகின்றனர்.அப்பட்டிப்பட்டோருக்கு மதஹபுகளும் அனுமதிக்கப்படவில்லை என்றுதான் இயம்புவார்கள்.இது பற்றியும் பிரிதொருமுறை உங்கள் சந்தேகத்திற்கு விளக்கம் தருகின்றேன்.கேள்விகளுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மலிக்கா
Post a Comment