Tuesday, September 21, 2010

இஸ்லாம்,இறைதூதர் பற்றி அறிஞர்கள்:




இறைவன் ஒருவன் தான் என்பதனை எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாத்தின் முதற்பணி.மக்களிடையே சகோதரத்துவத்தை வாழ்க்கையில் நடத்திக்காட்டியது இஸ்லாத்தின் இரண்டாவது பணி.
-மகாத்மா காந்தி

தத்துவக்காட்டில் சிக்கித்தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக நாங்கள் இஸ்லாத்தை கருதுகின்றோம்.
-அறிஞர் அண்ணா

ஒளிவிடும் வைரத்திற்கு ஒப்பாகவே நாயகம்(சல்)அவர்களின் கருத்துரைகள் உள்ளன.வைரத்தை உயர்ந்த அணிகலணாகவும் பவிக்கலாம்.அதை விற்று குதிரை பந்தயத்திற்கும் போகலாம்.அதை தவறாக பயன் படுத்தி அழிவையும் தேடலாம்.அது போலவே மார்க்கத்தைப்பயன் படுத்துவதைப்பொறுத்தே அதன் மாண்பு இருக்கின்றது.
-அறிஞர் அண்ணா.

இஸ்லாத்திற்கு நன்மை அன்பு என்ற ஆயுதத்தினாலேயே கிடைக்க முடியுமே தவிர கொடுங்கோன்மை என்னும் வாளினால் அல்ல.
-பாபர்

எல்லா தீர்க்கதரிசிகளையும்,மதத்தலைவர்களையும் விட மகத்தான வெற்றி பெற்ற மனிதர் முஹம்மத்(ஸல்)
-என்ஸைக்ளோபீடியா பிரிட்டாணிகா

முஹம்மத் தன் சொந்த வாழ்வில் சுமூக தன்மையும்,விசுவாசமும்,குடுமப்த்தின் பால் பரிவும்,மன்னிக்கும் குணமும் உடையவராக இருந்தார்.அவர் அதிகாரத்தின் உச்ச நிலையில் இருக்கும் போது கூட மிக எளிய வாழ்வை மேற்கொண்டார்.
-சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா

ஒரு மனிதரின் வார்த்தைக்கு மக்கள் அளிக்கும் மதிப்பில்த்தான் அவருடைய பெருமை எல்லாம் அடங்கி இருப்பதென்றால் இந்த வகையில் உலகில் தோன்றிய மனிதருள் முஹம்மத்(ஸல்) மிக உயர்ந்தவர்.
-லண்டன் 'டெய்லி எக்ஸ்பிரஸ்'

7 comments:

ஸாதிகா said...

டெஸ்ட்

ஸ்வீட் said...

டெஸ்ட்

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லோரும் அருமையா சொல்லிருக்காங்க.. அதை தொகுத்து வழங்கியது அருமை..

நல்ல பகிர்வு ஸாதிகா அக்கா..

உங்க பேரன் இப்போம் எப்படி இருக்கான்.. நடக்கிறானா.. கேட்டதாக சொல்லவும்..

Asiya Omar said...

ஒவ்வொரு இடுகையும் வித்தியாசமாய் கொடுக்கிறீங்க.எல்லாருடைய கல்பிலும் நிறைந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஸாதிகா said...

கருத்துக்கும்,விசாரிப்புகளுக்கும் நன்றி ஸ்டார்ஜன்.பேரன் நன்றாக இருக்கின்றான்.நடக்கின்றானாவா?பிளே ஸ்கூல் போகின்றான்.அவன் பண்ணும் சேட்டைகள்தான் தாங்க முடியவில்லை.

ஸாதிகா said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஆசியா தோழி!

ஜெய்லானி said...

சுருக்கமா தொகுத்த விதம் அருமை..!!