Sunday, September 19, 2010

ராபியத்துல் பஸ்ரியா(ரஹ்) வின் இபாதத்



பஸ்ரா நகரைச்சேர்ந்த ராபியத்துல் பஸ்ரியா என்ற இறைபக்தி மிக்க பெண்மணி .இவர் கனவிலும்,நனவிலும் ஹக்கனைப்பற்றிய சிந்தனையில் மட்டும் காலம் கழித்த முஹாஜிர்.ஒரு நாள் இவரிடம் மற்று மொரு இறைநேசசெல்வரான ஹஸன் பஸ்ரி(ரஹ்) என்பவர் சந்தித்தார்.ஆன்மீக நெறி பற்றி இரு இறைநேசர்களும் அளவளாவினார்கள்.

பேச்சினூடே"பஸ்ரியா,நீ சைத்தானை விரும்புகின்றாயா?"என்று கேட்டார்.
"இல்லை"என்றார் பஸ்ரியா.
"நீ சைத்தானை வெறுக்கின்றாயா?" என்று ஹஸன் பஸ்ரி கேட்ட கேள்விக்கும் "இல்லை"என்ற பதிலையே அளித்தார் பஸ்ரியா.

"விரும்பவும் இல்லை,வெறுக்கவும் இல்லை.என்ன இது முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றது உனது பதில்?விளக்கமாக சொல்"என்றார் ஹசன் பஸ்ரி.

"அல்லாஹ்வின் அன்பரே!என்னுள்ளம் இறைவன் வாழும் இல்லம்.அவ்வில்லம் முழுவதும் அல்லாஹ் மட்டுமே நிறைந்து இருக்கின்றான்.ஒரு சின்னஞ்சிறு இடைவெளி இன்றி அகம் முழுதும் அல்லாஹ் ஒருவனே என் அகத்தை ஆட்சி புரிகின்றான்.அப்படி இருக்க சைத்தானை விரும்பவோ,வெறுக்கவோ என் மனதில் எங்கே இடம் உள்ளது?"
பஸ்ரியாவின் பதில் கேட்டு மலைத்து நின்றார் ஹசன் பஸ்ரி(ரஹ்) அவர்கள்.

இறைநேச செல்வியான ராபியத்துல் பஸ்ரியா பஸ்ரியாவின் இறைபக்தியின் சிறப்புகளை,அவரது வாழ்க்கை வரலாறை இனி வரும் இடுகைகளில் பார்ப்போம்

6 comments:

Jaleela Kamal said...

ராபியத்துல் பஸ்ரியா (ரஹ்)வின் இபாதத் பற்றி தெரிந்து கொண்டோம், அடுத்த பதிவினையும் எதிர் பார்க்கிறேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஜலி.ராபியத்துல் பஸ்ரியாவின் வாழ்க்கை நெறிமுறை வரலாறை பார்க்கும் பொழுது எனக்கு வியப்பு ஏற்படும்.இப்படி கூட பெண்கள் இருக்க இயலுமா என்று.இஸ்லாத்தில் கன்னியாஸ்த்ரீ எனபதேகிடையாது.ஆனால் இவர் இறைவனை வணங்கும் பொருட்டுக்காக மணமே புரியாமல் இபாததிலேயே வாழ்நாளை கழித்தவர்.

ஜெய்லானி said...

எதுக்குமே இறைவனுக்காகன்னு வந்து விட்டால் அங்கே விருப்பு வெறுப்புக்கு இடமில்லை.. எல்லாமே ஒன்னுதான் எல்லாருமே சமம்தான் .

இதனால மனுஷன் எல்லாம் இறைவனின் செயல்ன்னு முன்னோக்கி போவானே தவிர கடந்ததை நினைத்து துக்கித்து அங்கேயே நின்ன மாட்டான்..

மிகப்பெரிய தத்துவம் இதில இருக்கு...!!

இன்னும் இது மாதிரி நிறைய போடுங்கள்...!!

ஸாதிகா said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெய்லானி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

Super Artcle

ஸாதிகா said...

தம்பி சேக் கருத்துக்கு நன்றி!