Saturday, September 18, 2010

எழிலரசர் யூசுப் (அலை)

யூசுப் (அலை)அவர்களை 18 திர்ஹங்களுக்கு மாலிக் என்பவரிடம் யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் விற்றதும் ,மாலிக், யூசுப் (அலை) அவர்களை ஏலம் விட்டார்.எழிலரசர் யூசுப் (அலை)அ வர்களின் அழகுத்திருவதனம் கண்ட மக்களில் பெரிய பெரிய செல்வந்தர்கள் அவரை விலைக்கு வாங்கி தனதாக்கிக்கொள்ள துடித்தனர்.ஏலம் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு கூன் கிழவி கம்பூண்றிக்கொண்டு வந்து ,தள்ளாடியவாறே தாம் நூற்ற நூல்கற்றைககளைக்காட்டி"தம்பிகளா!இந்த நூல் கற்றைகளை எடுத்துக்கொண்டு இப்பேரெழிலரசரை தாரும்!" என்று இயம்பினாள்.

அதனைக்கேட்ட சுற்றி இருந்தவர்கள் ஏளனமாக நகைத்தனர்"கிழவியே!எழில் உருவான யூசுபை தனதாக்கிக்கொள்ள செல்வந்தர்களே தம் பணபலத்தால் கடும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நூல்கண்டுக்கு இவர் கிடைப்பாரா?"என்று வினவினார்கள்.

அதனை செவியுற்ற கிழவி"இந்நூல்கண்டுகளுக்கு இவரது கால்தூசுகூட பெறாது என்பது எனக்குத்தெரியும்.வரலாற்றில் இப்பெரும் எழிலரசரை விலைக்கு கேட்டு வந்தேன் என்று பதியப்படவேண்டும்.அந்த புண்ணியமாவது எனக்கு கிடைக்கட்டும்" என்று இயம்பினாள்.

நபி யூசுப் (அலை) அவர்களின் பேரெழிலை புகழ்ந்த பாடப்பட்ட கவி:

இன்னனமே செந்நிறத்துச்
செம்மல் இவர் போழ்தில்

மன்னவனோ விண்ணவனோ
என்று பலர் மயங்க

மன்னவனே மண்ணதனை
ஆள்வதற்கே வந்த

மன் பெரிய மன்னவனே
என்று பலர் சொல்வர்

இன்னவரை ஈன்றெடுக்க
இருவருமே என்ன

பன்னரிய பெருந்தவமே
பண்ணினரோ என்பர்

அன்று;அன்று;இவர் மணக்கும்
அழகரசி எவளோ

அண்ணவளே அருந்தவமே
ஆற்றியவள் என்பர்

இன்னவனை மணந்திடற்கு
என்ன தவம் செய்வோம்

என்றெண்ணி ஏந்திழையார்
ஏங்கி,ஏங்கி நின்றர்

இன்னவனை போல ஒரு
எழில் மகனை பெறவே

என்ன தவம் செய்திடுவோம்
எனப்பலரும் நினைத்தர்

6 comments:

Asiya Omar said...

அழகான பகிர்வு.எங்கள் தகப்பனாரின் பெயர் முகம்மது யுசுஃப் தான்.அதனால் நிறைய யுசுஃப் எங்க குடும்பத்தில் இருக்காங்க.அண்ணன்மார்,அக்கா பையன்களில் ஒருவருக்காவது இந்த பெயர் தான்.

ஸாதிகா said...

நன்றி ஆசியா.

Jaleela Kamal said...

யுசுப் அலைவஸல்லம் பற்றி ஒரு தகவல் தெரிந்து கொண்டேன்.

இன்னும் அவரை பற்றி நிறைய சுவரசிய கதைகள் என் கிரான்மா சொல்லி இருக்காங்க.

ஜெய்லானி said...

இந்த அழகுதான் அவருக்கு எத்தனையோ கஷ்டத்தை கொடுத்தது..சிறு வயது முதல்...!!!

நல்ல பகிர்வூ

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஜலீலா

ஸாதிகா said...

உண்மைதான் ஜெய்லானி.நானும் இப்படி நிறைய படித்து இருக்கின்றேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.