Saturday, September 18, 2010
அளவற்ற அருளாளான்,நிகரற்ற அன்புடையோன்.
அர்ரஹ்மான் னிர்ரஹீம் - அளவற்ற அருளாளான்,நிகரற்ற அன்புடையோன்.
பல்க் நாட்டின் சிம்மாசனத்தில் ஆட்சி புரிந்துவந்த அரசர் இப்றாஹீம் பின் அத்ஹம் அவர்களின் ஞானப்பாதையில் ஓர் நாள்...
கடும்பசி,தாகத்தோடு ஒரு காட்டில் நடந்து வந்தனர்.களைத்த அரசர் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தனர்.தன் சட்டைப்பையிலிருந்த ஒரு காய்ந்து போன ரொட்டித்துண்டை எடுத்து புசிக்க ஆரம்பித்த வேலையில் எங்கிருந்தோ ஒரு காகம் வந்து ரொட்டியை பறித்துக்கொண்டு பறந்தது.
அத்ஹம் அக்காகத்தை தொடர்ந்து சென்றனர்.இறுதியாக அக்காகம் ஒரு மலையுச்சிக்கு சென்று அங்கிருந்த பாழடைந்த மண்டபத்தின் மேல் தளத்திற்கு சென்று அமர்ந்தது.காகத்தின் செயலை அறியும் நோக்கோடு அதையே குறிப்பாக கவனித்தனர்.
அக்காகம் ரொட்டித்துண்டுகளை காலில் வைத்து தன் அலகால் விண்டு விண்டு கீழே போட்டது.இதனைக்கண்ட அத்ஹம் 'இது என்ன விநோதக்காட்சி?இக்காகம் ரொட்டியை சாப்பிடாமல் கீழே போடுகின்றது?' என்று ஆச்சரியப்பட்ட அரசர் அந்த மண்டபத்தினுள் நுழைந்தனர்.அங்கே அவர் கண்ட காட்சி....
மண்டபத்தினுள் நலிந்து மெலிந்து போன ஒரு மனிதர் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தார்.அவர் அந்நிலையில் இருந்தவாறே மேல் நோக்கி வாயைப்பிளக்க அக்காகம் ரொட்டித்துண்டங்களை ஒவ்வொன்றாக அவரது வாய்க்கு நேராக போட அதனை அம்மனிதர் மென்று சாப்பிட்டார்.பிறகு எங்கிருந்தோ அந்த காகம் ஒரு கொட்டாங்கச்சியில் நீரை முகர்ந்து எடுத்து வந்து அதே போல் அவரது வாய்க்கு நேராக ஊற்ற அம்மனிதர் அதனை பருகினார்.
அந்த விந்தை நிகழ்சியால் நெகிழ்ந்து நின்ற அத்ஹம் அம்மனிதரை நெருங்கி கட்டுக்களை அவிழ்த்து"நீங்கள் யார்?இந்த மண்டபத்தினுள் எப்படி வந்தீர்கள்?" என்று வினவினர்.
"நான் ஒரு வியாபாரி.வியாபாரத்தை முடித்து விட்டு பெரும் பொருளுடன் எங்களூருக்கு இக்காட்டினை கடந்து வந்த பொழுது திருடர்கள் என் பொருளையும்,குதிரையையும் பறித்துக்கொண்டு என்னை சங்கிலியால் கட்டிவைத்து விட்டு சென்றுவிட்டனர்.நான் இப்படியே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றேன்.இது நாள் வரை இக்காகம் தான் எனக்கு இப்படி ஏதாகிலும் உணவை தவறாது கொண்டுவந்து கொடுக்கும்"என்றார்.
இதனைக்கேட்ட அத்ஹம் மட்டில்லா விநோதம் கொண்டார்."இறைவன் எத்தனை பெரும் அருளாளான்.நான் திக்குத்தெரியாத இக்காட்டில் தணியாத தாகத்தோடு தனித்து இருந்த பொழுது உண்ண உணவின்றி பசிக்கொடுமையால் உடல் சோர்ந்த நிலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்.அப்பொழுது என் உள்ளம் "ஓ..இப்றாஹீம் பின் அத்ஹம் என்ற அரசரே!உன் பதவி என்ன?பட்டமென்ன?சுகபோகமென்ன?அத்தனையும் துறந்து விட்டு ஆனந்த வாழ்வை இழந்து விட்டு இந்த திக்கு தெரியாத கானகத்தில் இப்படி எல்லாம் இன்னல் படுகின்றாயே?இங்கே யார் உன்னை கவனிப்பார்கள்?"என்ற எண்ணம் எழுந்து என்னை ஏங்க வைத்தது.இத்தகைய மனப்போராட்டத்துடன் என்னிடம் இருந்த ஒரே ஒரு ரொட்டித்துண்டை புசிக்க முற்பட்ட பொழுதுதான் இவை அத்தனை விநோதங்களும் நடந்தன."என்று கூறி அத்தனையையும் அம்மனிதரிடம் விளக்கினார்.
மேலும் கூறினார்."இறைவன்,என் இதயத்திற்கு நேரிய தெளிவான பதிலை சீரிய முறையில் நயம் பட விளக்கி உள்ளான் .அனைத்துயிரையும் படைத்துக்காக்கும் அருளாளன் எந்த உயிருக்கும் எந்த நேரத்திலும்,எந்த வகையிலாவது இரணம் அளிப்பான்."என்று கூறிய இப்றாஹீம்பின் அத்ஹம் இறைவனின் அருளை எண்ணி மெய்சிலிர்த்தார்.
எதற்கும் சக்தியற்று, உழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக தாயின் வயிற்றில் இருந்து பிறந்தோம்! வாழ்க்கையைக் கொடுத்தான்! வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான் தாயைக் கொடுத்தான், வாழ்க்கைத்துணையை கொடுத்தான் பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான், நம்மை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும் நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் நமக்கு இலவசமாக அருளினானே இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா? இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதா? சிந்தித்துப்பார்ப்போம். அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக உறுதியுடன் இருப்போம்! நம் அனைவர் மீதும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
Labels:
அளவற்ற அருளாளான்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஆமின் ஆமீன்,அருமையான துவாவோடு இடுகையை நிறைவு செய்தது நன்று.நல்ல ஹதீஸ்.
மிக்க மகிழ்ச்சி,நன்றி ஆசியா.
ஒரு நெகிழ்வான கதையை படித்ததில் சந்தோஷம் ஸாதிகா அக்கா, ரொம்ப வியப்பாக இருக்கு காகத்தின் செயல்,
துவா கபூலாகட்டும் ..ஆமீன்..!!
((கேப் விடாம தொடர்ந்து போடுங்க..அதுக்குன்னு ஒரே நாள்ள ரெண்டாஆஆஆ))
நானும் இச்சம்வத்தைப்படித்து நெகிழ்ந்து போனேன் ஜலீ.அல்லாஹ்வின் அளவற்ற கிருபையையும் அன்பையும் நினைக்கும் பொழுது நெகிழ்கின்றது மனம்.
//துவா கபூலாகட்டும் ..ஆமீன்..// ஆமீன் ஜெய்லானி.தொடர்ந்து ஊக்க மருந்து (பின்னூட்டம்)கொடுத்து வரும் உங்களுக்கு நன்றிகள்.//((கேப் விடாம தொடர்ந்து போடுங்க..அதுக்குன்னு ஒரே நாள்ள ரெண்டாஆஆஆ))// ஒகே..ஆகட்டும்..ரைட்டு..
Post a Comment