ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நாயகத்தோழர்களிலேயே பிரபலமான செல்வந்தர்.பெரும் செல்வந்தராக இருந்தாலும் படு எளிமையாக வாழ்ந்தவர் ஆவார்.
அவரது திருமணம் மதினா நகரில் நடந்தது.அது சமயம் பெருமானார் (ஸல்)அவர்கள் மதினா நகரில் இருந்த போதிலும் தமது திருமணத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூற விலை.
திருமணத்திற்கு அடுத்த நாள் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) அவர்கள் பெருமானார் முன் இருந்தார்கள்.அவர்களைக்கண்டதும் அண்ணல்(நபி)ஸல் அவர்கள் “அப்துர்ரஹ்மான்,உம் மீது மணவாடை வீசுகின்றதே.என்ன விஷயம்?”
என்று வினவினார்கள்.
“ஆம் ரசூலுல்லாஹ் அவர்களே!நேற்று என் திருமணம் ஒரு அன்ஸாரி பெண்ணுடன் நடந்தது”என்றார் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள்.
“அல்லாஹ் உடைய அருளும் மங்கலமும் உங்கள் இருவர் மீதும் உண்டவதாக “என்று பெருமானார் (ஸல்)அவர்கள் வாழ்த்தினார்கள்.
ஊர் மக்கள்: அனைவரையும் படை திரட்டி,லட்சக்கணக்கான கரன்சிகளை கொட்டி,விரயம் செய்து விருந்து வைத்து ,ஆடல் பாடல் மின்விளக்கு அலங்காரக்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்து நடத்தினால்தான் பெருமைக்குறிய விஷயம் என்று நினைக்கும் நம்மவர்களுக்கு நாயகத்தோழரின் திருமணத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.திருமண செய்தி அதே ஊரில் இருந்த பெருமானார் (ஸல்)அவர்களுக்கே கூட தெரிவிக்கப்படாமல்,அவ்வளவு பெரிய செல்வந்தர் மிகவும் எளிமையை கடை பிடித்தார் என்பதைபற்றி திருமணம் என்ற பெயரில் தேவை அற்ற அனாச்சாரங்களும் ஆடம்பரங்களும் செய்வோர் எண்ணிப்பார்க்கவேண்டும்.
16 comments:
இக்கால ஆடம்பரங்களுக்கு ஏற்ற அருமையான பதிவு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ்
நல்ல பகிர்வு
தற்போது தான் திருக்குரான் படிக்க ஆரம்பித்து உள்ளேன். இதனை நாள் நான் சேர்த்து வைத்த பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்து கொண்டு இருக்கிறது...
masha allah, good blog. the image of your blog gone small and you can change it by opening HTML code of design. and Mr. sekar, insha allah you will get answer for all the questions.
எளிய திருமணம் இறைவனுக்கு உவப்பானது.
எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.
எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
மிகவும் பகிரப்படவேண்டிய பின்பற்றப்படவேண்டிய செய்தி & பதிவு.. இன்று ஆடம்பரமான திருமணங்களே அங்கீகரிக்கபடுகின்றன... நம் சமுதாயம் நாளுக்கு நாள் ஆடம்பர போதையில் மூழ்கிக்கொண்டு இருக்கின்றன.... பதிவிற்கு நன்றிகள்!!
எளிமையான திருமணம் என்ற இப்பதிவு இக்காலத்துக்கு ஏற்றது அருமை நன்றி முடிஞ்சா எங்க பக்கம் வந்து எதாவது சொல்லுங்க
well said Saathika:)
U can check my crafts @ http://theepz-madcrafts.blogspot.in/
arumaiyaga kunineergal masa allah.
ஒரு வார்த்தைகூட கூற விலை there is a spelling mistake villai ku vilai nu type paniteenga sago
ஆடம்பரம் பகட்டு பந்தாவிற்காக தண்ணீர் போல் பணத்தை செலவு செய்து திருமணத்தை நடத்துபவர்கள், இவற்றைக்கொண்டு ஏழை எளியோர் நலன் பெற பயன்படுத்தி இறைவனிடம் நன்மையைப் பெறலாம் என்பதை மறந்துவிடுகின்றனர்.
அருமையான பதிவு !
தொடர வாழ்த்துகள்...
அருமையான பதிவு
வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்கள் வலைதளங்களுக்கு தேவையான திருகுர்ஆன் வசனம், நபி மொழிகள், துவா (பிராத்தனை) போன்ற widget கள் வேண்டுமா? உடனே கிளிக் செயுங்கள்...
http://ungalblog.blogspot.com/p/codes.html
Post a Comment