Monday, March 7, 2011

எது சிறந்தது?

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களிடம் “நாட்களில் சிறந்த நாள் எது?மாதங்களில் மகத்தானது எது?நன்மைகளில் மேலானது எது?என்று வினவப்பட்டபொழுது அவர்கள் அதற்கு கீழ்கண்டவாறு பதிலளித்தார்கள்.

“நாட்களில் மேலானது வெள்ளிக்கிழமை
மாதங்களில் மகத்தானது ரமலான் மாதம்
நன்மைகளில் சிறந்தது ஐவேளை தொழுகையை அதற்குறிய நேரங்களில் தொழுவது”

இவ்விஷயம் அறிவின் தலைவாசல் அலி(ரலி)அவர்களுக்கு எட்டிய பொழுது ”உலகில் கிழக்கு மேற்கு அனைத்திலும் உள்ள அறிஞர்களும்,மார்க்க வல்லுனர்களும் இப்னு அப்பாஸ் கூறியதைப்போல் பதிலளிக்க இயலாது.இருப்பினும் நான் கூறுவேன் “நண்மைகளில் சிறந்தது இறைவன் உன்னிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்மை.
மாதங்களில் மேலானது நீ உன் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக்கோரி இறைவனிடம் தூய்மை அடைந்த மாதம்,
நாட்களில் சிறந்தது நீ இவ்வுலகில் அல்லாஹ்வின் நல்லடியானாக இறையடி ஏகும் நாள்”என்று உரைத்தார்கள்.



7 comments:

Asiya Omar said...

சிறந்த பதிவு.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

ஜஸாக்கல்லாஹ் க்கைர்

Anonymous said...

இறையுணர்வு வளரும்; மனதில் அமைதி துளரும்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஸாதிகா அக்கா நீண்ண்ண்ண்ட நாட்களாக இதை மறந்தே போயிட்டேன், இன்று திடீரென நினைவு வந்து ஓடிவந்தேன். ஓ.. நாட்களில் மேலானது வெள்ளிக்கிழமையோ? நாங்களும் வெள்ளிக்குத்தான் அதிகம் மதிப்புக் கொடுப்போம்.

புல்லாங்குழல் said...

நல்ல பகிர்வு. அலி(ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை மதித்தவண்ணம் தங்கள் கருத்துகளை கூறியது ஓர் அழகிய படிப்பினை.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1),இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.......