எத்தனையோ திக்கற்றவர்கள் வானத்தின் பால் கையேந்தி “யா ரப்பு! யா ரப்பு!”என்று துஆ கேட்கின்றனர்.ஆனால் அவர்களின் உணவு,உடை,இருப்பு,அனைத்தும் ஹராம்.இந்நிலையில் கேட்கும் துஆ இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்பது மாநபியின் நல்வாக்காகும்.
”கூபா”நகரிலே மகான்களின் கூட்டம் ஒன்று இருந்தது.அவர்கள் துஆ கேட்டால் உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும்.அந்நகரத்தில் அநீதி செய்யப்படும் அதிகாரி நியமிக்கப்பட்டால் உடனே இவர்கள் துஆ செய்வார்கள்.அத்துடன் அந்த அதிகாரியின் ஆக்ரமிப்பு அழிந்து போகும்.மழை வேண்டிக்கேட்டால் உடன் மழை பொழியும்,இவ்வாறாக கூபா நகரில் அந்த மகான் கூட்டம் மக்களுக்காக பிரார்த்தனை செய்து வந்தது.
கொடியோன் ஹஜ்ஜாஜ் அதிகாரியாக நியமிக்கப்பட்டதும்,அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.அந்த மகான்கள் அனைவருக்கும் விருந்து அளித்தான்.அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நான் இந்த மகான்களின் சாபக்கேட்டில்; இருந்து தப்பித்து விட்டேன்.”என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.காரணம் என்னவென்று விசாரித்ததில் “மகான்களின் வயிற்றில் ஹராமான உணவு சென்று விட்டது”என்று கூறினான்.
ஹராமான உணவு மகான்களின் வயிற்றினுள் சென்று விட்டபடியால் அவர்கள் கேட்கும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஹஜ்ஜாஜ் கொக்கரித்த்து அவனது மதியீனம் இன்றி வேறென்ன?
13 comments:
அஸ்ஸலாமு அழைக்கும் ஷாதிகா
துஆவின் விளக்கம் அருமை.
வாழ்த்துக்கள்.
துவாவின் மகிமையே மகிமைதான் :)
சின்ன இடுகையில் பெரிய கருத்து.
உணவு ஹலாக இல்லை என்றால் எல்லாம் கெட்டது.
எம்மதமானாலும் இறைவனுக்கு அப்பாற்பட்டது நமது சக்தி எனபதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
வ அலைக்கும் வஸ்ஸலாம ஆயிஷா.தங்கள் கருதுரைக்கு மிக்க நன்றி.
சகோ ஜெய்லானி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
கருத்துக்கு நன்றி சகோ நூருல் அமின்.உணவு ஹலாலாக இருந்தது என்ரால் எல்லாம் கெட்டதுதான்.ஆனால் அறியாமல் சாப்பிட்ட உணவு ஹராமாகாது.ஹஜ்ஜாஜ் அவ்வாறு சிந்தித்தது அவனது அறிவீனம்.அறிந்தே ஹராமான பொருள் நம் வயிற்றினுள் செல்வது ஹராம் என்பத்தின் வெளிப்பாடே இந்த ஹதீஸ்.இல்லையா?
//எம்மதமானாலும் இறைவனுக்கு அப்பாற்பட்டது நமது சக்தி எனபதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்//அல்ல குறட்டைப்புலி .இறைவனுக்கு உட்பட்டதே நம்முடைய சக்தி.கேட்கும் உரிமை நம்மிடத்தில்.கொடுக்கும் உரிமையும்,வல்லமையும் அவனிடத்தில் மட்டுமே.
என்னது இதுக்கு பிறகு எதுவும் புதுசா போடவில்லையா..??? ...!!!! :-)
(( நான் ஏதோ ரொம்ப சுறுசுறுப்பு மாதிரி ))
ஜெய்லானி உங்கள் வேண்டுகோள் உடனே நிறைவேற்றப்பட்டது.
அழகிய விளக்கம்
//ஜெய்லானி உங்கள் வேண்டுகோள் உடனே நிறைவேற்றப்பட்டது.//
அல்ஹம்துலில்லாஹ் பதிவின் தலைப்பிற்கேற்ப துவா கபூலனது சந்தோஷம் :-)
.ஆனால் அறியாமல் சாப்பிட்ட உணவு ஹராமாகாது.//
துவாவின் மகிமையே மகிமைதான்
Post a Comment