13.ஸுஐபு(அலை): இவர்கள் நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தொன்றல்.வடமேற்கு சவூதியாவில் உள்ள மலைபிரதேசமான "மத்யன்"பகுதிக்கும்"அய்கா"என்னும் மற்றுமொரு பகுதிக்கும் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரிறைக் கொள்கையையும்,வணிகநேர்மையையும் மக்களுக்கு வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.
14.மூஸா(அலை) இவர்கள் கி.மு 14ஆம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தனர்.கொடுங்கோலன் இரண்டாம் ரம்சேஸ்(பிர் அவ்ன்)கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ராயீல் சமுதாயத்தை மீட்டார்கள்.இவர்களுக்கு அல்லாஹ் "தவ்ராத்" வேதத்தை அருளினான்.
15.ஹாரூன் (அலை):இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் சகோதரர்.எகிப்தின் சர்வாதிகாரி இரண்டாம் ரம்சேஸை எதிர்த்துப் போரடுவதில் மூஸா (அலை) அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
16.இல்யாஸ்(அலை): கி மு 8ஆம் நூற்றாண்டு நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஒரு இறைத்தூதர்.அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.
17.யூனுஸ்(அலை): கி.மு 8ஆம் நூற்றாண்டில் ,இராக்கிலுள்ள "நைனவா" பகுதிக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.
18.தாவூத்(அலை): இறைத்தூதர் யஃகூப்(அலை) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள்.இவர்களுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை அல்லாஹ் அருளினான்.இவர்கள் பாலஸ்தீன சர்வாதிகாரியான ஜாலூதை வீழ்த்தினார்கள்.
19.சுலைமான்(அலை): இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் மைந்தரான இவர்கள் இறைத்தூதராகவும்,பேரரசராகவும்,விளங்கினார்கள்.ஜெரூசலத்திலுள்ள புனித இறை இல்லமான பைத்துல் முகத்தஸை இறைக்கட்டளைக்கு இணங்க புதுப்பித்தார்கள்.ஜின் இனமும்,பறவை இனமும் இவர்களுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தன.
20.ஜகரிய்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இறைத்தூதர் தாவூத்(அலை) அவர்களின் வழித்தோன்றலான இவர்கள் அன்னை மர்யமை வளர்த்தார்கள்.இறைத்தூதர் யஹ்யா(அலை) அவர்கள் இவர்களின் புதல்வர் ஆவார்கள்.
21.யஹ்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் ஜக்கரிய்யா(அலை) அவர்களின் புதல்வர்.இவரை இஸ்ரவேலர்கள் படுகொலை செய்தனர்.
22.ஈஸா(அலை): இவர் கி.மு 4ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தில் உள்ள நாஸிரா என்னும் ஊரில் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆண் துணையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள்.இவருக்கு இஞ்ஜீல் வேதம் இறைவனால் அருளப்பட்டது.
23.துல்கிஃப்லு(அலை):இறைத்தூதர்.
24.அல்யஸவு(அலை): இறைத்தூதர்.
25.முஹம்மது(ஸல்): இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12(கி.பி 570 ஆகஸ்ட் 20) திங்கள்கிழமை திருமக்காவில் பிறந்தார்கள்.இப்புவியில் 63ஆண்டு காலங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் (கி.பி 632 ஜூன் 7)திங்கள் கிழமை இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.
6 comments:
தொகுப்பு அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி.
படமும் அதற்கு ஏற்றார் போல் எடுத்து தொகுத்து போட்டு இருக்கீங்க, ரொம்ப பொறுமையாக டைப் செய்து போடனும் இல்லையா? அருமை.
கருத்திட்டமைக்கு மிக நன்றி ஆசியா& ஜலீலா
ஜஸாக்குமுலாஹ் க்கைர்
ஜெய்லானி நன்றி.
get life man - கீழே கொடுத்துள்ள இனைப்பில் உள்ளதை படியுஙகள்.
http://www.islam-watch.org/AnwarSheikh/Islam-Arab-Imperialism.htm
Post a Comment