குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)
1.ஆதம் (அலை):உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்.இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பபட்ட முதல் இறைத்தூதர்.
2.இத்ரீஸ்(அலை):இறைத்தூதர் நூஹ்(அலை)அவர்களின் முப்பாட்டனாரான இவர்கள் இறைத்தூதர் ஆதம் - ஹூத் அவர்களுக்குப்பின்னால் வந்த நபியாவார்.
3.நூஹ்(அலை):ஆதித்தந்தை ஆதம் (அலை) அவர்களுக்குப்பின் வந்த இறைத்தூதர்.இவர்கள் 950ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயம் மிகப்பிரமாண்டமானது.
4.ஹூத்(அலை):கி.மு 2000 இல் வாழ்ந்த அரபு பழங்குடியின மக்களுக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இப்பழங்குடி மக்கள் யமன் நாட்டில் கடலோரப்பகுதிகளில் வசித்து வந்தனர்.
5.ஸாலிஹ் (அலை):இவர்கள் கி.மு 2430 இல் சவுதிய்யாவிலுள்ள அல்ஹிஜ்ர் என்னும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர்.ஆடம்பர வாழ்வில் மூழ்கி,சிலைவணக்கத்தில் மாய்ந்து போய்க்கொண்டிருந்த "ஸமூத்"கூட்டத்தினரை சீர்படுத்த பாடுபட்டார்கள்.
6.இப்றாஹீம்(அலை):இவர்கள் கி.மு 2000 வாக்கில் தென் இராக்கில் உள்ள "உர்"என்னும் ஊரில் பிறந்த இறைத்தூதர் ஆவார்கள்.இவர்களுக்கு "இறை நம்பிக்கையாளர்களின் தந்தை" எனவும்,"இறைவனின் உற்ற நண்பர்" எனவும் சிறப்பு பெயர்கள் உண்டு.இறை ஆணைப்படி கஃபா ஆலயத்தை தன் மகனோடு சேர்ந்து புனர் நிர்மாணம் செய்தார்கள்.
7.லூத் (அலை):நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் ஜோர்தானில் உள்ள "ஸத்தூம்"என்னும் பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரினசேர்க்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள்.
8.இஸ்மாயீல்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளுக்கு மூத்த புதல்வராவார்கள்.இவர்களிடம் இருந்து அரபு சந்ததிகள் தோன்றியதால் "அரபிகளின் தந்தை" என்பர்.
9.இஸ்ஹாக்(அலை): இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளின் இளைய புதல்வராவார்கள்.இவரின் மைந்தர்தான் யகூஃப் (அலை) அவர்கள்.எனவேதான் இவர்களை "இஸ்ராயீல்களின் தந்தை"என்று சொல்வர்.
10.யஃகூப்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வர்.இவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர்.இந்த 12 பேரின் வழித்தோன்றல்களே இஸ்ராயீல் சமூகத்தினர்.யஃகூப் (அலை) அவர்களின் மற்றுமொரு பெயரே இஸ்ராயீல்.இதனால் இஸ்ரவேலர்களை பனீ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் என்பர்.
11.யூசுப்(அலை): யஃகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்கள் கி.மு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பேரழகுக்கு சொந்தக்காரர்.இவர்கள் எகிப்தின் அமைச்சராகவும்,பின்னர் அரசராகவும் விளங்கினார்கள்.
12.ஐயூப்(அலை): நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்தவர்.நபி யூசுப்(அலை) அவர்களுக்குப்பின் ,தென் பாலஸ்தீனுக்கும் "அல் அகபா"வளைகுடாவுக்கும் மத்தியில் "அத்வம்"பகுதி மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.இவர்கள் பொறுமைக்கு பெயர் போனவர்கள்.
9 comments:
ஆஹா ..அற்ப்புதமான அறிவிப்புகள் வாழ்த்துக்கள்.
நபி ஐயுப் அலைஹிவசல்லம் அவர்கள், தீராத நோயால் நீண்ட காலம் வாழ்ந்ததாக கேள்விப் பட்டிருக்கேன்,பொறுமையின் எல்லையே ஐயுப்நபி.
தமது மேனி முழுதும் அருவருப்பற்ற நீரால் பின்னப் பட்டவராக வாழ்ந்த போதிலும், ஒரு நாளும் இறைவனை தொழுகாமல் இருந்ததில்லை.
மீதியையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுதுங்க ..!! :-))
நன்றி சகோ ஐயூப்.நபிமார்களில் ஐயூப் நபி பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.நான் நிறிய படித்து இருக்கின்றேன்.இது சிறு குறிப்புத்தானே?எல்லாவற்றையும் விளக்க இயலாது அல்லவா?
நன்றி சகோ ஐயூப்.நபிமார்களில் ஐயூப் நபி பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.நான் நிறிய படித்து இருக்கின்றேன்.இது சிறு குறிப்புத்தானே?எல்லாவற்றையும் விளக்க இயலாது அல்லவா?
நன்றி தம்பி ஜெய்லானி.//விரைவில் எழுதுங்க ..!! :-))// ஸ்மைலி போட்டு இருக்கின்றீர்கள்.இவை எல்லாம் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது பதிவெழுதி ஷெட்யூல்ட் இல் போட்டு வைத்தது.என்னை அறியாமல் தாறுமாறான திகதிகளில் அடிக்கடி பப்ளிஷ் ஆகி விட்டது.உங்கள் ஸ்மைலியைப்பார்த்துமே ஷெட்யூலில் போட்டு இருந்த இரண்டாம் பாகத்தை தேதி தள்ளி வைத்து விட்டேன்:-)(எனக்கே அடிக்கடி பதிவு பப்ளிஷ் ஆனதில் அலுப்பு வந்து விட்டது என்பதும் உண்மை)
எங்கள் கேள்வி? உங்கள் பதில்! முடிவு திகதி; 31.12.2010
பரிசு ரூபா 10.000
1. ஆமீன் என்ற சொல்லுள்ள சூரா எத்தனை?
2. குர்ஆன் ஆயத்துக்கள் எனும் வாக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3. நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் தொழுத இடமும், ஹிஜ்ரி ஆண்டும் எது?
4. நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்த வஹி அனைத்தும் குர்ஆனில் இடம்பெற்றுள்ளதா?
5. வஹி இறங்கிய வரிசையில் தற்போதுள்ள குர்ஆன் அமையவில்லை ஏன்?
arusba@gmail.com
கேள்விகளுக்கான விடைகளை
அனுப்ப வேண்டிய முகவரி;
"ஜும்ஆ" எங்கள் கேள்வி? உங்கள் பதில்!
சிங்கள முஸ்லிம் மித்திரர் மாவத்தை,
பலப்பிட்டி,
தென் இலங்கை
அஸ்ஸலாமு அலைக்கும்!!
உங்கள் எல்லோருக்கும் எங்களின் மனம் கனிந்த சலாமத்தான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!
aஅருமையான தொகுப்பு ஸாதிகா அககா,
thank you informative.
Post a Comment