ஹஸன் பஸ்ரி(ரஹ்) கூறினார்கள்."ஒரு நாள் பஸ்ரா நகரத்தில் ஒரு கடைவீதியில் நான் சென்று கொண்டிருந்த பொழுது அங்கே ஒரு மருத்துவரைக்கண்டேன்.மக்கள் அம்மருத்துவரை அணுகி தங்களது நோயை விளக்கி மருந்துகளை பெறுவதற்காக அவரை சூழ்ந்து நின்றிருந்தனர்.என்னுடன் நின்றிருந்த ஒரு வாலிபர் அவரை அணுகி "வைத்தியரே!பாவங்களை அகற்றி,இருதயங்களை சுத்தி செய்யும் மருந்துகள் தங்களிடம் உண்டா?"எனக்கேட்டார்.
"ஆம்!என்னிடம் உண்டு நான் தரும் பத்து வஸ்துக்களைப்பெற்றுக்கொள் என்ற வைத்தியர் பின் வறுமாறு கூறினார்.
"பணி வென்னும் மரச்சாற்றுடன்,ஏழ்மை எனும் மரச்சாற்றை எடுத்துக்கொள்.அதில் தவ்பா என்னும் கடுக்காயைப்போட்டு,திருப்தி என்ற உரலில் இட்டு,போதும் என்ற குழவியினால் அதனை அரை.பக்தி என்ற பாத்திரத்தில் ஊற்றி நாணம் என்ற நீரை ஊற்று.அன்பு எனும் நெருப்பினால் அதனை காய்ச்சி,நன்றி என்னும் குவளையில் ஊற்றி,ஆதரவு என்ற விசிறியால் ஆற்று.பின்னர் புகழ் என்ற கரண்டியால் அதனைப்பருகு.நீ அவ்வாறு செய்தால் உனது இம்மை,மறுமையின் எல்லாவித நோய்களும் தீரும்"என்றார் வைத்தியர்.
3 comments:
நல்ல உவமானத்துடன் விளக்கம்.அருமை.
இருதய சுத்தத்துக்கு அருமையான விளக்கம் கொடுத்து இருக்கீங்க ஸாதிகா அக்கா
ஆசியா,ஜலீலா கருத்துக்கு நன்றி.
Post a Comment