
ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு பிரயாணி ஒருவரின் ஒட்டகம் வழியினில் இறந்து விட கலீபா அலி (ரலி) அவர்களை சந்தித்து தமக்கு உதவி கேட்கலாம் என்ற எண்ணத்துடன் வெகு தூரம் நடந்து வந்து தலைநகர் மதீனா வந்து சேர்ந்தார் அவ்வெளிநாட்டுப்பிரயாணி.பின்னர் கலீபாவின் திருமகனார் ஹஜரத் ஹுசைன் (ரலி) அவர்களை சந்தித்து விஷயத்தைக்கூறினார்.
தனது தந்தையார் வெளியில் சென்று இருப்பதாகவும்,அன்னார் வரும் வரை பள்ளிவாசலில் இருக்கும் படி கூறி விட்டு அவருக்கு உணவு கொண்டு வருவதற்காக தன் இல்லத்திற்கு சென்று விட்டார்கள்.
அன்னார் சென்ற சிறிது நேரத்தில் பள்ளிவாசலுக்கு வந்த ஒரு எளியவர் ஒரு ஓரத்தில் அமர்ந்து தாம் கொண்டுவந்த அந்த உணவை உண்ண ஆரம்பித்தார்.சற்று நேரத்தில் ஹுசைன் (ரலி)அவர்கள் தான் கொண்டு வந்த உணவை பிரயாணி முன் வைத்து உண்ணுமாறு வேண்டினார்.
அதற்கு அப்பிரயாணி ஓரத்தில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தவரை சுட்டிக்காட்டி "அதோ,அங்கே பாருங்கள்!பாவம் அவர் மிகுந்த எழை போல் தெரிகின்றது.அவரிடம் காய்ந்து போன ரொட்டிகள்தான் இருக்கின்றது.தொட்டுக்கொள்ளக்கூட எதுவுமின்றி காய்ந்த ரொட்டிகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்.அவரை இங்கே அழைத்து வாருங்கள்.அவர் என்னுடன் சேர்ந்து இந்த உணவை அருந்தட்டும்" என்றார்.
வெளிநாட்டுப்பிரயாணி சுட்டிக்காட்டிய திக்கை நோக்கிய ஹஜ்ரத் ஹுசைன்(ரலி) அவர்கள் புன்னகை புரிந்தவர்களாக கூறினார்கள்."அவர்கள் வேறு யாரும் அல்ல.நீங்கள் நாடி வந்தவர்களும்,என் தந்தையுமான கலீபா அலி (ரலி)அவர்கள் தான்.எப்பொழுதும் அவர்கள் வழக்கமாக உண்ணும் உணவைத்தான் உண்டுகொண்டிருகின்றார்கள்.இதை விட சிறந்த உணவை அவர்கள் உண்பதில்லை."என்று கூறினார்கள்.
மாபெரும் இஸ்லாமிய பேரரசின் ஈடு இணையற்ற தலைவர் ,அன்னாரின் காலடியில் செல்வங்கள் கொட்டிக்கிடக்கின்றது.ஆயினும் அன்னார் உண்பதோ....!!!!
வெளிநாட்டு பிரயாணி அப்படியே மலைத்து நின்றார்.
6 comments:
நல்ல உதாரணம் ..ஆனா விஷயத்தை டக்குன்னு முடிச்சிட்டீங்க ..( நோன்பு களைப்போ..)
கருத்துக்கு மிக்க நன்றி ஜெய்லானி.களைப்புக்கு எல்லாம் அசரமாட்டேன்.
அவர்கள் உய்ர் தியாகம் செய்து வளர்த்த இஸ்லாமிய நந்தவனத்தை காக்க அவர்களைப் போல நாம் நடக்க வேண்டாம். அப்படி மாறும் எண்ணத்துடன் கொஞ்சம் நடித்தால்(பாவனை செய்தால்)கூட போதும் உண்மை முஸ்லிமாகி விடுவோம்.
அருமையான் இடுகை ச்கோதரி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரி.,ஏதெச்சையாக வலை உலா வரும் வழியில் உங்கள் வலைப்பூவை கண்டேன். நான்காம் கலிபா அலி (ரலி) அவர்களின் வாழ்வு குறித்த சரித்திர நிகழ்வுகள் பல எழுத்தாலும், எண்ணத்தாலும் நான் அறிந்திருந்தாலும் இந்த ஆக்கம் குறித்து நான் இதுவரை அறியாததே., மாஷா அல்லாஹ் இன்று நான் படித்ததிலேயே இது ஒரு நல்ல பதிவு.
சகோ நூருல் அமீன் //அவர்கள் உய்ர் தியாகம் செய்து வளர்த்த இஸ்லாமிய நந்தவனத்தை காக்க அவர்களைப் போல நாம் நடக்க வேண்டாம். அப்படி மாறும் எண்ணத்துடன் கொஞ்சம் நடித்தால்(பாவனை செய்தால்)கூட போதும் உண்மை முஸ்லிமாகி விடுவோம். // அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.நன்றி!
வ அலைக்கும் வஸ்ஸலாம் ரஹ்மதுல்லாஹி பரக்காத்தஹு சகோ குலாம் .உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி!
September 14, 2010 8
Post a Comment