Saturday, August 21, 2010

ஏழைகளின் அறம்




"நாயகமே!செல்வந்தர்கள் நன்மைகளை எல்லாம் அபகரித்துக்கொண்டு சென்றுவிடுகின்றார்கள்..நாங்கள் தொழுவது போல் அவர்களும் தொழுகின்றனர்.நாங்கள் நோன்பு நோற்பது போல் அவர்களும் நோன்பு நோற்று விடுகின்றனர்.ஆனால் தங்களிடன் உள்ள செல்வத்தை எழைகளுக்கு வாரி வழங்கி நன்மைகளை எல்லாம் பெற்று விடுகின்றனர்.எங்களால் அறம் செய்ய முடிய வில்லையே"என்று சில வறிய முஹாஜிரீன்கள் ஏக்கத்துடன் கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அறம் செய்யக்கூடிய தகுதியை நிச்சயமாக அளித்துள்ளான்.நிச்சயமாக சுப்ஹானல்லாஹ் என்ற ஒவ்வொரு தஸ்பீஹும் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒவ்வொரு தஹ்மீதும்,அல்லாஹு அக்பர் என்ற ஒவ்வொரு தக்பீரும் அறத்தை சார்ந்தவையே ஆகும்.இன்னும் நற் செயல் புரியுமாறு பிறரை பணிப்பதும் அறம்தான்.தீயசெயல் புரியாது விலக்குவதும் அறம்தான்"என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூதர் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்


Add Video

8 comments:

ஜெய்லானி said...

இந்த மூனும் தொழுகைக்கு பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்வது நல்லது .அதுவும் இந்த நோன்பு நேரத்தில் ...

ஜஸாக்குமுல்லாஹ் க்கைர்

Unknown said...

சிறப்பான இடுகை. தெரிந்து கொண்டமைக்கு தங்களுக்கு
என் நன்றிகள்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்,
ஏழைகளின் அறம் என்ற தலைப்பில,
அல்லாஹுவை திக்ரு செய்வதை
தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.

ஸாதிகா said...

நன்றி ஜெய்லானி.முகப்புத்தகம் மூலம் கோரிய உங்கள் கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது.செப்டம்பருக்கு அப்புரம் வழக்கம் போல் பதிவுகள் தொடரும்.

ஸாதிகா said...

சகோதரர் அபுல்பசர் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் ஆயிஷா.(என்னே இனிமையான பெயர்.)உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜெய்லானி said...

உடனே கோரிக்கை நிறைவேற்றப்பட்டதுக்கு நன்றி. நீங்க போடாட்டியும் நாங்க விடமாட்டோமுல்ல ..

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சகோதரி ஸாதிகா அவர்களுக்கு,

நல்ல கருத்து, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படத்தில் இருப்பது போல் தஸ்பீஹ் மணியை வைத்து தஸ்பீஹ் செய்ய நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தரவில்லை, இருந்தாலும், நீங்கள் தஸ்பீஹ் ஓதுதல் என்பதை பாட்த்தில் காட்டுவதற்காக தான் இந்த படத்தை போட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய கைகளாலேயே தான் தஸ்பீஹ் செய்திருக்கிறார்கள், அப்படியிருக்க நாமும் அப்படித் தான் தஸ்பீஹ் செய்ய வேண்டும், இதை அனை வரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இங்கு நான் பதிகிறேன்.

தவறாக எண்ண வேண்டாம்