நிச்சயமாக அல்லாஹ் தும்முவதை உவக்கின்றான்.கொட்டாவி விடுவதை உவப்பதில்லை.எனவே உங்களில் எவரேனும் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப்புகழ்ந்தால் அதனை செவியுறும் ஒவ்வொரு முஃமினும் “யர்ஹமுகல்லாஹ்”என்று மறு மொழி பகர வேண்டியது கடமையாகும்.ஆனால் கொட்டாவி ஷைத்தானின் புறத்தால் வருவதாகும்.எனவே உங்களில் எவருக்கேனும் கொட்டாவி வரும் பொழுது இயன்ற அளவு அதனை அடக்கிக்கொள்ளுங்கள்.(வாயை மூடிக்கொள்ளவும்)ஹா..ஹா..எனக்கூற வேண்டாம்.இது செய்தானின் செய்கையாகும்.இதனைக்கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மதி
நிச்சயமாக நான் ஒரு சொற்றொடரை அறிவேன்.அதனைக்கூறின் நிச்சயமாக அவரை விட்டும் அவரது சினம் பறந்து விடும்.அது “அவூதுபில்லாஹி மினஸ்ஷைத்தானனிர்ரஜீம்”(விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
அறிவிப்பாளர்:முஆதுபுனு ஜபல்
ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி
அறிந்து கொள்ளுங்கள் எவன் சினமுறும் பொழுது தன்னைத்தானே அடக்கியாள ஆற்றல் பெற்றுள்ளானோ அவனே உண்மையான வீரன்.
அறிவிப்பாளர்:இபுனு மஸ்வூத்
ஆதாரம்:முஸ்லிம்,அபூதாவூத்
15 comments:
லேட்டா போட்டாலும் பொருத்தமான பதிவு :-)
ஆனால் தொழுகையில் வரும் போதுதான் ரொம்ப கஷ்டம்
உடன் பின்னூட்டலுக்கு உடன் நன்றி.உங்களுக்காகவே சீக்கிரம் சீக்கிரமாக இந்த பதிவு.உற்சாகமூட்டலுக்கும் நன்றி.
//ஆனால் தொழுகையில் வரும் போதுதான் ரொம்ப கஷ்டம்
//உண்மைதான்.இறைவனுக்கு உவப்பான செயல்களை மனிதன் புரியும் பொழுது இந்த ஷைத்தானுக்கு பொறுப்பதில்லை.அதனால்தான் நமது நாயகம் (ஸல்) அவர்கள் அழகிய வழிமுறையை சொல்லித்தந்து இருக்கின்றார்கள்.
நல்ல கருத்துக்கள்.ரொம்ப நாள் கழிச்சி நல்ல பதிவு.
நன்றி தோழி.
மிகச்சரியாக போட்டு இருக்கீங்க ஸாதிகா அக்கா,
இறைவன் நம் உடலுக்கு பல பாதுகாப்புகளை தந்துள்ளான் . தும்மல் அதில் ஒன்று.
மூக்கில் முடி கொடுத்து தூசி நுரையீரலுக்கு செல்லாமல் தடுக்க. அதனையும் மீறினால் மூக்கில் நீர் சேர்த்தல்(nasal conjugation) பின்புதான் தும்மல்.தும்மல் வந்தால் நிறுத்த வேண்டாம் , அதுவும் நம் பாதுகாப்புக்குத்தான். இத்தனை பாதுகாப்பு கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .
When sneezing say Alhamto-lillah
தங்கை ஜலீலா,சகோதரர் நீடூர் அலி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல பதிவு.
அறிந்து கொள்ளுங்கள் எவன் சினமுறும் பொழுது தன்னைத்தானே அடக்கியாள ஆற்றல் பெற்றுள்ளானோ அவனே உண்மையான வீரன்.//
Very true.
அறிந்து கொள்ளுங்கள் எவன் சினமுறும் பொழுது தன்னைத்தானே அடக்கியாள ஆற்றல் பெற்றுள்ளானோ அவனே உண்மையான வீரன்.//
Very true.
அறிந்து கொள்ளுங்கள் எவன் சினமுறும் பொழுது தன்னைத்தானே அடக்கியாள ஆற்றல் பெற்றுள்ளானோ அவனே உண்மையான வீரன்.//
Very true.
நல்ல பதிவு அக்கா..
இறைவன் மிகுந்த நுண்ணறிவு உள்ளவன். மகா கிருபையாளன்..
Post a Comment