1.அல்லாஹ்வின் தூதுவர்கள் மூவர்
1.மார்க்க யுத்தம் செய்பவர்
2.ஹஜ்ஜுக்கு செல்பவர்
3.உம்ரா செல்பவர்.
அ:அபுஹுரைரா(ரலி)
ஆ:நஸாயீ
2.அல்லாஹ்வின் பொறுப்பில் இருப்பவர் மூவர்
1.அல்லாஹ்வின் வழியில் போர் செய்பவர்
2பள்ளிவாசலுக்கு செல்பவர்
3.தன் வீட்டிற்கு அமைதி நாடி செலபவர்.
அ:அபு உமாமா
ஆ:அபூதாவூத்
3.மூவித நற்செயல்கள் எவரில் குடி உள்ளதோ அவர் மீது அல்லாஹ் தன் அடைக்கல ப்போர்வையை போர்த்தி அவரை சுவனபதியில் சேர்க்கின்றான்.
1.இயலாதோருக்கு உதவுதல்
2.பெற்றோர் மீது அன்பு கொள்ளுதல்
3.அடிமைக்கு உதவுதல்.
அ:ஜாபிர் (ரல்)
ஆ"முஸ்லிம்
4.அல்லாஹ் நேசம் கொள்ளும் மூவர்.
1.மறைவாக தானம் அளிப்பவர்
2நிறைவாக இறைமறை ஓதுபவர்
3.அஞ்சா நெஞ்சத்துடன் மார்க்கப்போர் புரிபவர்.
அ:அபுசர்
ஆ:திர்மிதி
5.அல்லாஹ் சினம் கொள்ளும் மூவர்
1.விபச்சாரம் செய்பவர்
2.பெருமைபாராட்டும் ஏழை
3.அநியாயம் செய்யும் செல்வந்தர்
அ:அபுசர்
ஆ:திர்மிதி
6.மனிதன் இறந்து விட்டாலும் முடிவுறாத மூன்று செயல்கள்
- நிலையான தர்மம் ... உதா: குளம் வெட்டுதல் , கிணறு வெட்டுதல் , நிழல தரும் , மற்றும் கனி தரும் மரம் நடுதல்(( ஊர் பொதுவாக உபயோகிக்க))
- நேர்மையான கற்று பிறருக்கும் கற்பித்த கல்வி.
- சாலிஹான பிள்ளைகள்.. (( தன் தாய் தந்தைக்காக துவா செய்யும் பிள்ளை))
அ:அலி(ரலி)
ஆ:திர்மிதி
7.மூன்றுவித மனிதருடன் மறுமையில் இறைவன் உரையாட மாட்டான்.
1.விபச்சாரம் புரிபவர்
2.பொய் கூறும் அதிகாரி
3.சக்தி இருந்தும் உழைக்காத குடும்பஸ்தன்
அ:அபூஹுரைரா
ஆமுஸ்லிம்,நசாயீ
8.மூன்றுவித மனிதர்களை இறைவன் மறுமையில் நோக்க மாட்டான்
1.பெற்றோருக்கு மாறு செய்பவன்
2.ஆண் ஆடை அணியும் பெண்
3.ரோஷம்,சுரணை அற்றவன்.
அ:இபுனு உமர்
ஆ:நஸாயீ
9.மூன்று வித மனிதர்கள் மறுமையில் நாயகத்தின் விரோதிகள்.
1.மோசம் செய்பவன்
2.சுதந்திரமுள்ள மனிதனை விற்று அதனை உண்பவன்.
3.வேலைக்குறிய கூலியை பணியாளுக்கு அளிக்காதவன்.
அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி
10.இறைவன் அறுவெறுப்படையும் மூவித செயல்கள்.
1.பயனற்ற பேச்சு பேசுதல்
2.பணத்தை வீண் விரயமாக்குதல்
3.அதிகமாக பொருட்களை கேட்குதல்
அ:முகீரா(ரலி)
ஆ:புகாரி